சிம்மம்

 12 ராசிகளுக்குமான 2015 மன்மத வருட ராசிபலன்கள்

மேஷம் - ரிஷபம் - மிதுனம் - கடகம் - -சிம்மம் - கன்னி

2015 – 2016 ஆ‌ம் ஆ‌ண்டிற்கான மன்மத வருட ராசிப் பல‌ன்களை
சிம்மம்
      (மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய)
 சிம்ம ராசி அன்பர்களே!
    எங்கும், எதிலும் எந்தக் காரியத்திலும் எப்போதும் முன்னணியில் நிற்க வேண்டுமென்ற எண்ணமும் முனைப்பும் கொண்டு எண்ணத்தைச் செயலாக்கி சாதனையாக மாற்றி வருபவர்கள்.
     எந்தவொரு காரியத்தைச் செய்தாலும் மற்றவர்கள் உங்களை முன்னிலைப்படுத்துவார்கள். ஆனந்தக் குளியலான அருவிக் குளியல், அதிவேக நீச்சல், பல்டி அடித்துக் குளித்தல் போன்ற வீரதீர சாகசங்கள் செய்வதற்கு மிகவும் ஆசைப்படுவீர்கள்.
      எந்த நிலையிலும் நீங்கள் மற்றவர்களுக்கு பணிந்து நடக்கமாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில்  எவ்வளவு துன்பம் வந்தாலும் பயப்படமாட்டீர்கள். முரட்டுத்தைரியம், துணிச்சல், வாய்சாமர்த்தியம் வாதாடி ஜெயித்தல் போன்றவை உங்களுக்கு கைவந்த கலை என்னதான்  கோபம் இருந்தாலும் நகைச்சுவை உணர்வு அதிகமாகவே  இருக்கும்.  தீர்த்தயாத்திரை சிவன் ஆலயங்களில் உழவாரப் பணிகள் போன்ற ஆலயப் பணிகளில் முழு ஈடுபாட்டுடன்  கலந்து கொள்வீர்கள்.
  சகல கலைகளிலும் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பீர்கள்.  நீங்கள் செய்யும் தொழிலில் பலவிதமான புதுமைகளைக்  கையாள்வீர்கள்.
   சிம்ம ராசிக்காரர்களிடம் சூரியனைப்போன்ற  பிரகாசம் இருக்கும். சந்திரனைப்போன்ற வாக்கு சாதுர்யமும் செவ்வாயைப் போன்ற வாக்கு வண்மையும் இருக்கும். செல்வம் செல்வாக்கு, சொல்வாக்கு நிலையான புகழுடன் உயர்ந்த பதவியில் சிறப்பாக விளங்குவார்கள்.   தன்னுடைய அந்தஸ்துக்குக் கீழானவர்களிடம் மிகுந்த அலட்சியத்துடனும் அதிகாரத்துடனும் சிறிது கர்வம் கொண்டவர்களைப்போல நடந்துக் கொள்வார்கள்.  
  நீங்கள் இப்போது நிதானமான போக்குடன் செயல்பட வேண்டும். குழந்தை இல்லாத தம்பதியர் ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாய் - தந்தையருக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். எனவே தக்க நேரத்தில் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இப்போது சினிமா கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசு பதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அந்த பதவியை அடைவார்கள்.
    பொதுவாக எந்த காரியத்திலும் நிதானித்துச் செயல்படுபவர்கள் கூடுதல் லாபத்தை அடைவார்கள்.  உறவினர் மூலம் காரிய சித்தி ஏற்படும். சிம்ம ராசி அன்பர்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலைச் செய்வார்கள். புதிய வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.  கடன் பாக்கிகள் வசூலாகும்.  பெண்கள் புன்னகையோடும்  பொன்நகையோடும்   சுபகாரியங்களில்  கலந்துகொண்டு உற்சாகம் அடைவார்கள்.
    8-1-2016ல் ராகு பகவான் சிம்ம ராசிக்கு வருகிறார்.  அதுவரை ராசிக்கு 2ல் கன்னி வீட்டில் உள்ள ராகு பகவான் எப்போதும் உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தருவார்.   நல்ல வாய்ப்புகள் வாயிற் கதவைத்தட்டும்.  சிலர் பெரிய தொழிற்சாலைகளைத் துவக்கி நல்ல தொழிலாளர்களையும், பெற்று பொருளாதாரத்தில் உயர்வார்கள். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் பொருள்வளம் பெருகும்.  அயல்நாட்டு வணிகம் உற்பத்தி அனைத்திலும் கூடுதலான லாபம் வரும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை  கூடும். நண்பர்கள் கூட்டாளிகளுடன் நீங்கள் செய்துவரும் தொழில் உயரும். வருமானம் இரட்டிப்பாகும் அரசாங்கம், அரசியல்வாதிகளின், ஆதரவால் நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும்.
    ஒரு சிலருக்கு 5-7-2015க்கு பிறகு நிரந்தரப் பணி ஏற்படும்.    பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வந்த சொத்துக்களும் கைக்கு வந்து சேரும்.
  குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்த நிலை மாறும். உங்களிடம் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு கொடுக்காமல் இருந்தவர்கள் வலியவந்து தொகையைத் திருப்பித்தருவார்கள். இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.
    5-7-2015  முதல் நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் வாழவேண்டும். வீண் பழி ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். விவசாயத்தை நவீன முறையில் செய்து சிலர் நல்ல லாபமும் அதிக மகசூலும் பெறுவார்கள்.
    3-12-2015 முதல் 21-12-2015 வரை யோககாலமாகும் . சுபநிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கும். லாரி, டிராக்டர், இயந்திர வகைகளால் எப்போதும் நல்ல லாபத்தை  அடைவீர்கள்.
   1-1-2016  முதல் 14-1-2016 வரை சிம்ம ராசி அன்பர்கள் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் வாகனத்தில் மிகவும் எச்சரிக்கையாக பார்த்துச் செல்ல வேண்டும்.  எனவே இந்த கால கட்டம் கவனமாக இருக்க வேண்டும்.

 பெண்கள்
          இந்த மன்மத வருடத்தில் பெண்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருந்தாலும் தம்பதிகள் இருவரும் உடனுக்குடன் விட்டுக் கொடுத்து சுமூக வாழ்வு வாழ்வார்கள்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
      தொழிலில் எதிர்வரும் குறுகீடுகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள். வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் தேவைகளையறிந்து பூர்த்தி செய்வார்கள். உழைப்புகேற்ற ஆதாயம் கிடைக்கும். எதிர்களினால் தொல்லைகள் ஏற்படும். ஜூன் 2015 முதல் லாபங்கள் படிப்படியாக உயரும்.
மாணவர்கள்
    மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அதிகமான முயற்சியெடுத்து படிக்க வேண்டியிருக்கும். கலையிலும், விளையாட்டுத் துறையிலும், ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.  படிப்பை முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்க விடாமுயற்சி செய்ய வேண்டும்.
 மகம் நட்சத்திரக்காரர்களுக்கு
  சித்திரை முதல் ஆடி வரை செளபாக்கியத்தோடும், தனலாபத்தோடும், எதிர்கால யோகத்தோடும் வாழ்வீர்கள். ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது.
    மார்கழி முதல் பங்குனி வரை காரியபங்கம் ஏற்படலாம். எனவே அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.  எனவே புதிய காரியங்களை செய்தல் கூடாது.
பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு
     சித்திரை முதல் ஆடி வரையிலும் 7 பங்கு லாபம் வருகிறது.  குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
   ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 2 பங்கு லாபம் உண்டு. பொருளாதார நிலை உயரும். தேவையான ஆடம்பரப்  பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
உத்திர (1 ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரை 5 பங்கு லாபம் வருகிறது. ஆவணி முதல் கார்த்திகை வரை 1 பங்கு லாபம் மட்டும் வருகிறது. எனவே உயரும், சேமிப்பு உங்களுக்கு கைகொடுக்கும்.
 ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
      ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானுக்கு பச்சரிசி மாவு அபிஷேகம் செய்துவந்தால் நல்ல பலனை அடையலாம்.  கந்த சஷ்டி கவசம் சிறப்பு தரும். ராகு - கேதுவுடன்  கூடிய விநாயகரை அன்றாடம் தரிசனம் செய்துவர நன்மையுண்டு.
வாழ்க வளமுடன்