தனுசு

12 ராசிகளுக்குமான 2015 மன்மத வருட ராசிபலன்கள்
 மேஷம் - ரிஷபம் - மிதுனம் - கடகம் - -சிம்மம் - கன்னி

2015 – 2016 ஆ‌ம் ஆ‌ண்டிற்கான மன்மத வருட ராசிப் பல‌ன்களை    
தனுசு
 (மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய)
     தனுசு ராசி அன்பர்களே!
     உலகத்திலுள்ள சாஸ்திர சம்பிரதாய விஷயங்களை முழுவதும் அறிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள் நீங்கள்.  எழுத்துவித்தை  உங்களிடம் அதிகமாகவே இருக்கும்.  எதையும் வெளிகாட்டி கொள்ள மாட்டீர்கள்.
     எந்தவொரு காரியத்தையும் திறமையாக வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுப்பீர்கள். எல்லாரிடத்திலும் சிறிய குழந்தையைப்போல கள்ளம்  கபடமின்றி எளிமையாகவும் இனிமையாகவும் பழகுவீர்கள்.
        உங்கள் மனதில் எந்த ரகசியமும் தங்காது. உடனேயே  யாரிடமாவது சொன்னால்தான் உங்களுக்கு தூக்கமே வரும்.
    உண்மையில் ஆத்மார்த்தமான ஆழமான பக்தியுடையவர்கள் கோபத்தில் உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை முள்போல  தைத்து மாறாத வடுவை ஏற்படுத்தும்.
   தீயவர்களிடமோ கெட்டவர்களிடமோ சகவாசம் வைக்கமாட்டீர்கள். பிடிவாதம் இருக்கும். அது உங்கள் குடும்பத்தினரிடம் மட்டும்தான்! உங்களது உடல்நலத்தைப் பாதுகாக்க உடற்பயிற்சி செய்வீர்கள்.
   பட்டிமன்றம் வழக்காடுமன்றம் போன்ற கூட்டங்களில் முன்னணியில் நின்று நகைச்சுவை ததும்ப பேசுவோர்    பெரும்பாலும் தனுசு ராசிக்காரர்களே! இளம்வயது முதலே உங்களுக்கு சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் அதிகமாகவேயிருக்கும். எதையும் விளையாட்டுத் தனமாகவும் போக்கிரித்தனமாகவும் எடுத்துக்கொள்வதால் உங்கள் முயற்சியில் அவ்வப்பொழுது தடை வந்து விலகும்.
     குறைந்த உழைப்பில் நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை உங்களிடம் அதிகமாகவே இருக்கும். ஏட்டுக்கல்வியைவிட்டு பொது அறிவும் பட்டறிவும், கேள்வி ஞானமும் அதிகமாக இருக்கும். பெரும்பாலும் சொந்தத்திலேயே  திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். குலத்தொழில், பரம்பரைத் தொழில், கைத்தொழில், மரபு சார்ந்த தொழில், போன்றவற்றை அதிகம் செய்பவர்கள் தனுசு ராசிக்காரர்களாகவே இருப்பார்கள்.
    தாய்ப்பாசம் அதிகம், சகோதரப்பாசம் குறைவு, உயர்கல்வி யோகம் இருந்தாலும் படிப்புக்கேற்ற வேலை கிடைப்பது அரிது.  எந்த நிலையிலும் சட்ட விரோதமான காரியங்களை  ஒருபோதும் செய்யமாட்டீர்கள். நாட்டின் நீதித்துறை மருத்துவத்துறையில்  பணிபுரியும் வாய்ப்ப்பைப் பெற்றிருப்பீர்கள்.
         தற்போது குரு பகவான் உள்ள இடம் 8ஆம் இடமாகும். எனவே 4-7-2015 வரையிலும் நீங்கள் அமைதிகாக்க வேண்டும்.  8ல் உள்ள குரு பகவானால் வீண் மனவேதனை உருவாகியிருக்கும் பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்படும். பொதுத் தொண்டு, அறங்காவலர் பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்கள் குடும்பத்தில் குழப்பம் வரலாம்.  சமூகத்தில் சிலர் வீணான கெட்ட பெயரெடுப்பார்கள். ஒருசில அரசு ஊழியர்கள் திடீர்                     இடமாற்றத்தைச் சந்திப்பார்கள்.  இன்னும் சிலர் கையூட்டுபெற்று காவல்துறை தண்டனைக்கு ஆளாவார்கள்.  சிலருக்கு சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்து அவமானம் ஏற்படும். அதுவரை புதிய யுக்திகளைக் கையாள வேண்டும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்கிவர வேண்டும். வெளிநாடு செல்ல போட்ட திட்டத்தை 5-7-2015 வரை சற்று தள்ளிவைக்க வேண்டும்.
  5-7-2015  முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ல் வரும்போது உங்கள் வாழ்வில் வசந்த காலம், துவங்குகிறது.  குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9ஆம் இடத்தில் சூரியன் வீட்டில் சிம்மத்தில் வருகிறார். தனது சொந்த வீடான   தனுசை 5ஆம் பார்வையால் பார்ப்பது விசேஷம்.
    வியாபாரிகள் நல்ல லாபத்தைக்காண்பார்கள். ஒருசிலர் புதிய வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். மாணவர்கள்  கல்வியில் உயர்வார்கள் இது வரையில்  வாழ்க்கையில் இருந்துவந்த தடை தாமதங்கள் நீங்கும்.  அவர்கள் காதல் திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம்.
     சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். சனி பகவானின் மூன்றாம் பார்வை அவரின் முதல் வீடான மகரத்தில் விழுகிறது. மேலும் சனி 29-7-2015 வரையிலும்  வக்ரம் அடைகிறார். இந்தக் காலகட்டத்தில் நன்மையே நடக்கும்.
      16-12-2014 முதல்  விரயச்சனி நடைபெற்று வருவதால் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டும். ஒரு சில அரசியல்  பிரமுகர்களுக்கு பதவியில் மாற்றம் வரும். ஒருசிலர் கோர்ட், கேஸ் என அலையக்கூடும்.
     இப்போது கூட்டுத் தொழில் செய்கிறவர்கள் கவனமுடனிருப்பது  நல்லது.  உங்களுடன் பணிபுரிகின்றவர்களுக்கு நீங்கள் பரிந்துப் பேசுவதால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.  உடல்நிலையில் அதிக பாதிப்புகளைக் கொடுக்க மாட்டார். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.  பழைய கடன்கள்  பைசலாகும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவரும்.
      ராகு பகவான் 21-6-2014  முதல் உங்கள் ராசிக்கு 10ல் கன்னி வீட்டில் இருக்கிறார். எப்போதுமே 10ல் உள்ள ராகு பகவான் வருமானத்தை அதிகரிப்பார். ஒருசிலர் வெளிநாடு சென்று அதிக லாபத்தைப் பெறுவார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நீங்களே முடிவு செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்கள். திடீர் பணக்காரர்கள் ஆவார்கள்.  சொத்துப்பிரச்சனைகளில் சமூகமான முடிவுகள் வரும். பங்காளிகள் சண்டை  தீர்ந்து  ஒற்றுமை கூடும். தடைப்பட்டுவந்த மங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.
    உங்கள் கூட்டாளிகளை உதாசீனம் செய்து ஒதுக்கிவிடாதீர்கள். புதிய கூட்டாளிகளை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள்.  குடும்பத்தில் காணாமல்போன பொருட்கள் யாவும் கிடைக்கும். தொலைபேசியில் நல்ல செய்திகள் வந்து சேரும். மனைவி மக்கள் கேட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொடுப்பீர்கள்.  தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள்  நல்ல முடிவுக்கு வரும்.
   கேது உங்கள் ராசிக்கு 4ல் உள்ளார். எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பக்குவத்துடன் செயல்படுவீர்கள். படித்து வேலைதேடும் உங்கள் பிள்ளைகள் இந்த ஆண்டில் நல்ல வேலைகளைப் பெறுவார்கள். ஒருசிலர்  மத்திய அரசு  வேலைகளுக்குச் செல்வார்கள்.
   வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.  வீடு, மனை வாங்க  போட்ட திட்டம் நிறைவேறும்.  பூர்வீக சொத்துக்களில் பங்காளிகளின் மத்தியில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். ஒரு சிலரின் பூர்வீக சொத்துகளில் வம்பு, வழக்கு ஏற்பட்டிருக்கும். இப்போது அந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். கொடுக்கல் - வாங்கலில் ஏற்பட்டிருந்த பின்னடைவுகள் சீராகும். போட்டியாக இருந்துவந்த வியாபாரிகள் விலகிச் செல்வார்கள்.
      அரசுப் பணீயாளர்கள் தங்களின் நியாயமான செயல்களால் மட்டும் பணியிட மாற்றத்தில் நல்ல இடத்தைப் பெற முடியும். வெளிநாட்டிலிருக்கும் அன்பர்கள்   வேறுநாடு சென்று தொழில் செய்ய போட்ட திட்டம் நிறைவேறும்.
   இதுவரை  சில தீய சக்திகள் செயல்பட்டுவந்தன. அவை விலகிச் செல்லும் சமுதாயத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ஒருசிலர் செல்வவளம் பெற்று முக்கியஸ்தர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவார்கள்.
பெண்கள்
   பெண்கள்  இந்த ஆண்டும்  எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  திருமணமாகாத பெண்களுக்கு நல்லவரன் அமைந்து திருமணம் நடக்கும்.  ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம்  கிட்டும்.  புதிய நகைகள் வாங்கலாம். 
 தொழிலதிபர்கள், வியாபாரிகள்
      தொழிலதிபர்கள், வியாபாரிகள், அதிகமாக உழைக்கவேண்டும். உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். புதிய தொழில் துவங்குவதை தவிர்க்க  வேண்டும். பண விஷயத்தில் எந்த கஷ்டமும்  வராது. அதே நேரத்தில் ஒருசிலர் வியாபாரத்தில் சில விரயங்களைச் சந்திப்பீர்கள்.
மாணவர்கள்
       மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்வியில் உள்ள மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷ்னில்  தேர்வு அடைவார்கள்.   ஜீன் வரை கவனச்சிதறல் கூடாது. நண்பர்களுடன்  அரட்டை, பொழுது போக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  மூல நட்சத்திரக்காரர்களுக்கு
   சித்திரை முதல் ஆடி வரையிலும் 2 பங்கு லாபம் உண்டு. வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
  ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 2 பங்கு லாபம் உண்டு. மார்கழி முதல் பங்குனி வரையிலும் வருமானம் சீராக இருக்கும்.  சேமிப்புகள் உயரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துகளால் லாபத்தைப் பெறுவீர்கள்.
  பூராட நட்சத்திரக்காரர்களுக்கு
   சித்திரை முதல் ஆடி வரையிலும் உங்களுக்கு 5 பங்கு லாபம் வரும். இது உங்களுக்கு பொற்காலம். வீடு நகை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
    மார்கழி முதல் பங்குனி வரையிலும் ஓரளவு வருமானம் உண்டு. சிக்கனமாக செயல்பட வேண்டும்.
 உத்திராட (1ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும்  லாபம் குறைவு வருமானம் குறைவு. ஆவணி முதல் கார்த்திகை வரை லாபம்  வருகிறது.
 மார்கழி முதல் பங்குனி வரை லாபம் உள்ளது. நினைத்த காரியங்கள் கைகூடும்.  லாபம் பெருகும். குடும்பத்தில் நிம்மதிபெருகும்.
 ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
     சனிக்கிழமைகளில் நரசிம்மரை வணங்கிவந்தால் நலம்பெறலாம். ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாளை வணங்கிவந்தால் சிரமம் குறையும். சனிக்கிழமைகளில் வில்வமரத்திற்கு சந்தனம் மற்றும் பன்னீர் கலந்து தெளித்து மரத்தை ஒன்பது முறை வலம் வந்து வழிபட வேண்டும்.  முடியாதவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
வாழ்க வளமுடன்