மகரம்

12 ராசிகளுக்குமான 2015 மன்மத வருட ராசிபலன்கள்

மேஷம் - ரிஷபம் - மிதுனம் - கடகம் - -சிம்மம் - கன்னி

2015 – 2016 ஆ‌ம் ஆ‌ண்டிற்கான மன்மத வருட ராசிப் பல‌ன்களை
மகரம்
உத்திராடம், 2ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய)
மகர  ராசி அன்பர்களே!
தனக்கு நிகர் யாரும் இல்லையென அடிக்கடி  கூறிக்கொண்டே இருப்பவர்கள். வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதில் அளவில்லாத பிரியமுடையவர்கள்.
     புகழ், கீர்த்தி, அந்தஸ்துடன் விளங்கும். மனைவிமேல் அளவிக்கு அதிகமான பாசம்வைத்திருப்பவர்கள் மகர ராசிக்காரர்கள். அடிக்கடி வீட்டை மாற்றிக்கொள்ள ஆசைப்படுவார்கள். சொல்லில் ஒருவிதமான உறுதிப்பாடு தெரியும். இசை என்ற இன்ப வெள்ளத்தில் அடிக்கடி நீந்திக்கொண்டே இருப்பீர்கள்.  யாரிடமிருந்தும் கடன் வாங்கி வாழவும் கூடாது என்ற பிடிவாதம் உங்களிடம் இருக்கும்.
      தாய்ப்பாசம் அதிகமாக இருக்கும். ஆனால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுக்கு எதாவது ஒரு நோய் வாட்டிக்கொண்டேயிருக்கும்.  இருப்பதைக் கொண்டு  சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவர்கள். பொதுவாக உயர்கல்வி அமையும் பாக்கியமுண்டு. உங்கள் இல்வாழ்கையில் மனைவி ஒரு புத்திசாலி மந்திரியாகவே அமைவார். பெண்  குழந்தைகளே அதிகம் பிறக்கும்.
     உங்கள் குழந்தைகளால் நீங்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள். உங்களது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் தனியொரு மனிதனாக இருந்தாலும்  உங்கள் முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் ஒரு பெரிய உற்றார்-உறவினர் கூட்டத்தையே சேர்த்துவிடுவீர்கள்.
     உங்களது  அவசரபுத்தியால் பல நல்ல சந்தர்ப்பங்களையும், முன்னேற்றங்களையும் நழுவவிட்டிருப்பீர்கள். ஆன்மிகத்தில் அதிகமான ஈடுபாடு கொண்டவர்கள் மகர ராசிக்காரர்கள். எதையும் பெரிய  அளவில் செய்யும் திறமைகொண்டவர்கள். ஆடை  விஷயங்களில் விலையுயர்ந்த ஆடம்பரமான ஆடைகளையே உடுத்துவீர்கள். நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு சரியான அளவில் சாப்பிடுபவர்கள்.
    எதிரிகளை மன்னிக்கும் குணம் உங்களிடம் கிடையாது. பழிவாங்கும் எண்ணமே அதிகமாக இருக்கும்.
  குரு பகவான் 4-7-2015 வரை 7ல் அமர்ந்து நல்ல பலன்களை வழங்குவார். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார வளம் மேம்படும். வீடு, மனை வாங்கலாம்.
     இந்தக் காலகட்டத்தில் ஒருசிலர் தூரதேசத்தில் வாழ்கிறவர்களின் சொத்தை குத்தகைக்கு எடுத்து அதன்மூலம் நல்ல லாபத்தை அடைவார்கள். தனியார் துறையில் வேலையிழந்து வேலையில்லாமல் இருப்பவர்கள் வேறு கம்பெனிகளில் புதிய பொறுப்புகளில் அமர்வார்கள்.  ஒருசிலர்  புதிதாக நெல் அறுவடை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்களை வாங்குவார்கள்.  நீண்டகாலமாக குடும்பத்தில் தடைப்பட்டு வந்த  சுபகாரியம் நடந்து முடியும். அரசாங்க கடன்களை அடைத்து நிவர்த்தி பெறுவீர்கள்.  ஒருசிலர் அடகுவைத்த நகைகளை பாக்கியின்றி மீட்பார்கள்.
    4-7-2015  வரையிலும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 7ல் நின்று மேற்கண்டவாறு நல்ல பலன்களை வழங்குவார்.
   5-7-2015 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 8ல் அமர்வார். அவர் சிம்மத்தில் அமர்ந்து சொந்த வீட்டை 5ம் பார்வையாகப் பார்ப்பதால் கூடுதல் உழைப்பையும், லாபத்தையும், தருவார்.  சிம்மத்தில் குரு பகவான் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் வீணான மனக்குழப்பம் உண்டாகும்.
     குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு எனவே குரு 8ஆம் இடத்தில்  சாதகமற்று இருக்கிறாரே என்று நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். அது உங்களுக்கு பாடம்புகட்டுவது போலதான் இருக்குமேயன்றி தண்டனை கொடுப்பதாக அமையாது.
   ஒருசிலர் தேர்தலில் வெற்றிபெற்று, அமைச்சர் பொறுப்புக்கும் வர வாய்ப்புக்கள் அதிகமுள்ளது.  27 கறுப்பு கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து எப்போதும் பர்சில் வைத்துக் கொள்ள அனைத்தும் சாதகமாக நடக்கும்.
   சனி பகவான் அருளால் தடை, தாமதங்கள் அனைத்தும் மாறும் ஒருசிலருக்கு மாமியார் வீட்டு சொத்து வந்துசேரும்.  ஒருசிலருக்கு எதிர்பாரத யோகமுண்டு. சிலருக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாக இருக்கும். நீண்டகால திட்டங்களும், ஆசைகளும், நிறைவேறும். குடும்பத்தில் இதுவரை  நடந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கடந்த காலத்தில் உங்கள் அனுபவத்தில் நிறைய இழப்புகளை அடைந்திருப்பீர்கள்.
    உங்கள் ஆரோக்கியத்தை பேணிகாக்க  வேண்டும் ஒருசில அரசியல் பிரமுகர்களுக்கு பதவியில் மாற்றம் வரும். நிழல் கிரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9ல் கன்னி வீட்டில் உள்ளார். அதே நேரம் அவரால் பொன், பொருள், கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் கூடும்.  பூமி, பொருள், அழியாச் செல்வம் வரும். வீட்டுக்கு பயன்தராமலிருந்த  உங்கள் பிள்ளைகள் இனி உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
      ராகு 9ல் உள்ள இந்தக் காலகட்டத்தில் இயந்திரங்களைக் கையாள்வோர் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். வயல்வெளி, காட்டுப்பகுதியில் வேலைசெய்பவர்கள், பாம்புகளால் ஆபத்து வராதபடி எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்.
      புதியவர்களை தொழில் கூட்டாளிகளாக சேர்க்கும்போது அவர்கள் ஜாதகத்தைப் பார்த்து சேர்க்க வேண்டும்.  குடும்பத்தில் பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் கைகூடும்,
   கேது பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான மீனத்தில் உள்ளார். ஆனால் உங்கள் கூட்டாளிகள் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்துநீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
     நீங்கள் பெருமையாகவும், உதவியாகவும் நினைத்த தாய்வழி உறவுகள் இப்போது கெடுதலாகத் தோன்றும். வீடு, மனை, வாசல், விருத்தி ஏற்படும். குடும்பத்திலும் சுற்றத்திலும் இருந்துவந்த கசப்புணர்வுகள் நீங்கும்.
   செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயம் சென்று வழிபட்டு வர உறவில் பகை வராது. அரசுப்  பணியில் உள்ளவர்களுக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் வரும். ஒருசிலர் பதவி உயர்வோடு மாறுதலில் செல்வார்கள்.
 பெண்கள்
     ஆண்டின் ஆரம்பத்தில் பணத்திற்கு எந்த குறையும் இல்லை. பின்னாட்களில் சிறிது சிரமம் வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு 4-7-2015 க்குள் திருமணம் முடிவுக்கு வரும். உடன்பிறந்தோரிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கும்.  விலகிச் சென்ற சொந்தங்கள் வந்துசேரும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
      தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  லாபம் அதிகரிக்கும். அனுகூலமான போக்கு காணப்படும். அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவித்தொகை 4-7-2015 க்குள்  கிடைக்கும். ஒருசிலர் தீய நண்பர்களின் சேர்க்கைக்கு ஆளாகி அவதியடைய வாய்ப்புக்கள் அதிகமுள்ளது.
மாணவர்கள்
     இந்த கல்வியாண்டில் நடைபெறும் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். அடுத்த கல்வியாண்டில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.
உத்திராட (2,3,4ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
     சித்திரை முதல் ஆடி வரையிலும் சீரான வருமானம் இல்லை.  ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் குறைவில்லை. செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல பலன்களே  உருவாகும். அனைத்து காரியத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.
    மார்கழி முதல் பங்குனி வரையிலும் எப்பொழுதுமுள்ள வருமானத்துடன் உதிரி லாபங்கள் கிடைக்கும். இப்போது நீங்கள் மனச் சோர்வு இல்லாமல் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள்.
திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும் கூடுதலான லாபத்தையும், உதிரி வருமானங்களையும் பெறுவீர்கள். அது உங்களுக்குக் கைகொடுக்கும்.
  ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் மிகவும் குறைவாக உள்ளது.  எனவே நீங்கள்  சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.  புதிய கடன்கள்  வாங்காமல் தள்ளிப்போட வேண்டும்.
அவிட்ட (1,2ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரை 6 பங்கு லாபம் உள்ளது. ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் குறைவாக உள்ளது.
    மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் சிறப்பாக இல்லை. எனவே சிக்கனத்தைக் கடைப்பிடித்து சீராக வாழவேண்டும்.
 ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
    ஒவ்வொரு திங்கள் கிழமையிலும்  சிவபெருமானுக்கு ரோஜா பூக்களால் அர்ச்சனைசெய்து நன்மைபெறலாம். ருத்ராபுஷேகம் செய்துவந்தால் சகல செளகரியமும் கிடைக்கும். பச்சரிசி அபிஷேகம் செய்வது சிறப்பு. அப்படி செய்துவர சிவபெருமான் உங்களுக்கு நன்மையே செய்வார்.
வாழ்க வளமுடன்