மிதுனம்

12 ராசிகளுக்குமான 2015 மன்மத வருட ராசிபலன்கள்

மேஷம் - ரிஷபம் - மிதுனம் - கடகம் - -சிம்மம் - கன்னி

2015 – 2016 ஆ‌ம் ஆ‌ண்டிற்கான மன்மத வருட ராசிப் பல‌ன்களை
   மிதுனம்
மிருகசீரிஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3ஆம் பாதம் முடிய)
மிதுனராசி நேயர்களே!
       வேத  சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அடுத்தவர்களுடைய எண்ணங்களையும், நோக்கங்களையும் எதிராளிகளின் முகத்தைக் கண்டு குறிப்பறியக்கூடியவர்கள்.  மிதுனமென்றாலே அறிவு, தெளிவு, ஆற்றல் புத்திக்கூர்மை விவேகம், முன்யோசனை என்று பல அர்த்தங்கள் உண்டு. அப்படிப்பட்ட மிதுன ராசிக்காரர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது.
   ஆடல், பாடல், சங்கீதம், வேடிக்கை, வினோதமென்று எப்பொழுதும் மனம் இன்பத்தை நாடிக்கொண்டே இருக்கும். உங்கள் மனம் கோபத்திலும்கூட இன்பத்தைத்  தேடிப்போகுமென்றால் ஆச்சரியமில்லை.
   உங்கள் வார்த்தையில் கேலியும், கிண்டலும் மலிந்திருக்கும்.கவர்ச்சியாகவும், தந்திரமாகவும், வஞ்சகமாகவும் பேசி உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.
   உங்கள் மனதில் எப்பொழுதுமே நடிப்புச் சிந்தனைகள் மேலோங்கிக் கொண்டேயிருக்கும். கலையுலகத்தில் பிரகாசிக்க வேண்டும்.  எந்த ஒரு காரியத்தை நீங்கள் செய்தாலும் அதில் ஒரு புதுமையிருக்கும் உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் பெரியதொரு வித்தியாசமே இருக்கும்.
     உங்களுடைய மனம்  எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் உங்கள் செயல்பாடுகள் நீண்ட காலதாமதத்தை ஏற்படுத்தும். “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம்” என்ற பாடல் வரிகள்  உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்குமென்றால் அது மிகையில்லை.
    உங்கள் உடல்நலத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள அரும்பாடுபடுவீர்கள். உங்களுக்குக் கோபம் வந்தால்கூட அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே இருந்து காரியத்தைச் சாதித்துக்கொள்வீர்கள். உங்கள் மனம் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பதால் உங்கள் வாழ்க்கை நீண்ட ஆயுள் உடையதாக இருக்கும்.
   மிதுன ராசிக்காரர்கள் சிலர் சுயநலவாதிகள். பணவிஷயங்களில் சாதுரியமாக  சம்பாதித்து கணக்குவழக்கு விஷயங்களில் திறமையாக இருப்பவர்கள்.
  அடுத்தவர் சொல்லுக்கு செவிசாய்க்காமல் முரட்டுப் பிடிவாதத்தால் பல நல்ல முன்னேற்றங்களைத் தடுப்பவர்களும் மிதுன ராசிக்காரர்களே!
          நவகிரகங்களில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான நற்பலன்களையும்  தீய பலன்களையும் வழங்கும் கிரகங்கள் குரு, சனி, ராகு - கேது  இந்த மூன்று கிரகங்களும் மற்ற கிரகங்களைவிட கூடுதலான நல்ல பலன்களைத் தருகின்றன.  எனவே நீங்கள் 5-7-2015 வரையிலும் குரு பகவான் அருளால் அதிகமான லாபத்தைப் பெறுவீர்கள்.
     இரு சாரரும் நல்ல வரன்கள் அமைந்து சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். மூடிக்கிடந்த முல்லைத் திறந்துள்ள  முதலாளிகள் 5-7-2015 வரை எதிர்பாராத கூடுதல்  லாபத்தைப் பெறுவார்கள். மருத்துவமனை நடத்துபவர்கள் மேலும் விரிவாக்கம் செய்வார்கள். ஒருசில மருத்துவர்கள் வெளிநாடு சென்று தொழில் செய்வார்கள்.
  இது மாதிரியான நற்பலன்களை வழங்கிய குரு பகவான்
5-7-5015ல் உங்கள் ராசிக்கு 3ல் மாறுகிறார்.  குரு பகவான் சிம்மத்தில் அமர்ந்துள்ள காலங்களில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டுவிடாதீர்கள். விலையுயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசுப் பணியாளர்களில் ஒரு சிலர் மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆளாவார்கள். உடன் பிறந்தவர்களால் சுபகாரிய பங்கம் ஏற்படும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். சகோதர- சகோதரிகளிடையே  பலமான கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். எனவே  குருப்பெயர்ச்சிக்குப்பின் அடுத்த குருப்பெயர்ச்சி வரை மிதுன ராசி அன்பர்கள் மிகவும் கவனத்துடன்  செயல்பட வேண்டும். எந்தக் காரியத்தையும் பிறரிடம் ஆலோசித்துச் செயல்பட வேண்டும். மேலதிகாரியாக உள்ள ஒருசிலர்  காவல்துறை நடவடிக்கைக்கு ஆட்பட  நேரிடலாம். உங்களுக்கு ஜால்ரா  போடுபவர்களிடம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
    நீங்கள் 20-6-2015 வரை மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். ஒவ்வாமை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஒருசிலர் ஆட்படக்  கூடும். எனவே ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.  ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4லும் கேது பகவான் 10லும் உலா வருவர். கேது பகவான் 10ல் அமர்ந்து அதிகமான லாபத்தை உங்களுக்கு வழங்குவார். கேது பகவானால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செயலில் வெற்றியும் கிடைக்கும்.
   ஆண்டின் முற்பகுதியில் அதாவது 20-6-2015 வரை ராகு பகவான் உங்களுக்கு நன்மைகளைச் செய்வார்.  ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4ல் வருவதால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீங்களும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கமாட்டீர்கள்.  ரத்த சம்பந்தமான நோய்கள் வரலாம். எனவே சற்று கவனத்துடன் உடலைப்  கவனமாக பார்க்க  வேண்டும். உங்கள் உடன்பிறந்த மூத்த சகோதரி சகோதரர் மூலம் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒருசிலருக்கு  காதுவலி  வரும்.
    5-7-2015  முதல் 2-12-2015 வரையிலும், உங்கள் உடன் பிறந்தவர்களுக்காக பொருளாதார உதவிசெய்து அதனால் உங்களுக்கு புதிய கடன் வந்துசேரும்.
    3-12-2015  முதல் 21-12-2015 வரையிலும்  வாழ்க்கையில் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் பலவழிகளில் ஏமாற்றம் உண்டாகும்.  மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
   22-12-2015 முதல் 4-7-2016 வரை கைப்பொருட்களை மிகவும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பொருட்கள் களவுபோக வாய்ப்புகள் அதிகமுள்ளது. போலீஸ், வழக்கு ஏற்பட்டு அதிக அளவில் செலவு செய்து வழக்கில் வெற்றிபெற நேரும்.
       சனி பகவான் 16-12-2014 முதல் உங்கள் ராசிக்கு 6ல் உள்ளார்.  இக்காலகட்டத்தில் உங்களுடைய  பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். எனினும் குடும்பத்தில் தனபாக்கியம்  மற்றும் லட்சுமி கடாட்சம் ஏற்படும். சனி ஒருவரே ராஜயோகத்தை தர உள்ளவர். எனவேதான் ரிஷப லக்னாமாக உள்ள அன்பர்கள் அதிகமான நற்பலன்களை அடைவார்கள்.
  குரு பகவான் அருளாலும் சனி பகவான் அருளாலும்,  முயற்சிகளில் வெற்றி கைகூடும். புதிய நிலம் வாங்கும் யோகமும் உண்டாகும். 
 பெண்கள்
        மன்மத வருடத்தில் குடும்பத்தில் வசதி அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.  பெண்களுக்கு பல ஆண்டுகளாக தடைப்பட்டுவந்த திருமணம் இனிதே நிறைவேறும்.  நல்ல வரனாக அமையும்.  நீண்ட காலமாகப் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.  காதல்வசப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோர்  பேச்சுக்கு மதிப்புக்கொடுத்து காதலைக் கைவிடுவார்கள்.

 தொழிலதிபர்கள், வியாபாரிகள்
       தொழிலதிபர்கள் உற்பத்தியைப்  பெருக்கி ஆதாயத்தை அதிகரிக்க  முயற்சி செய்வார்கள்.   தொழில் ரீதியாக ஒருசிலர் அடிக்கடி வெளியூர், வெளிநாடு  பயணம் சென்று வருவார்கள்.
  மாணவர்கள்
     5-7-2015 முதல் கல்வியாண்டு முடியும் வரை  அதிகமான சிரத்தை எடுத்து படித்து முன்னேறவேண்டும். கல்வியில் தடைவராது. உயர்கல்வியிலும் சிலர் கேம்பஸ் செலக்ஷனில்   தேர்வு பெறுவார்கள். ஒருசில மாணவர்கள் அலட்சியப்போக்கால் குறைந்த மதிப்பெண் பெறலாம்.  எச்சரிக்கையாகப் படிக்க வேண்டும்.
 மிருகசீரிட (3,4, ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
      சித்திரை முதல் ஆடி வரை வருமானம் புதிய கடன் ஏற்படலாம்.  செலவுகள் கூடுதலாகும். கவனம் தேவை. ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் புதிய கடன் ஏற்படலாம்.    
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு
            ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 1 பங்கு லாபம் உள்ளது.  சித்திரை முதல்  ஆடி வரை 3 பங்கு லாபம் உள்ளது.
    மார்கழி முதல் பங்குனி வரையிலும் 4 பங்கு லாபம் உள்ளது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆலய வழிபாடுகள் சிறக்கும்.
புனர்பூச (1,2,3 ஆம் பாதம் ) நட்சத்திரக்காரர்களுக்கு
      சித்திரை முதல் ஆடி வரை 6 பங்கு லாபம் வருகிறது. இது உங்களுக்கு வசந்த காலம் சேமிப்பை உயர்த்துவீர்கள். ஆவணி முதல் கார்த்திகை வரை 2 பங்கு லாபம் சேமிப்பு குறையும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
     ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்றும் விநாயகருக்கு பன்னீர், சந்தனம், விபூதி கொண்டு பூஜை செய்து வணங்கி வர வேண்டும்.  திங்கள்கிழமை அன்று பச்சரிசி  மாவினால் சிவ பெருமானுக்கு அபிஷேகம்  செய்யலாம்.  மேலும் அஷ்டமி திதிகளில் காலபைரவரை  வணங்கி, அவருக்கு மிளகு தீபம் ஏற்றி வணங்கிட வருடம் முழுவதும் நல்ல பலன்கள் அமையும்.
வாழ்க வளமுடன்