கடகம்

12 ராசிகளுக்குமான 2015 மன்மத வருட ராசிபலன்கள்

மேஷம் - ரிஷபம் - மிதுனம் - கடகம் - -சிம்மம் - கன்னி

2015 – 2016 ஆ‌ம் ஆ‌ண்டிற்கான மன்மத வருட ராசிப் பல‌ன்களை
கடகம்
 புனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம், முடிய)
 கடக ராசி அன்பர்களே!
 வாழ்க்கையில் சுனாமியே வந்தாலும், கோடை இடிபோல முழக்கம் வந்தாலும், பூகம்பமே வந்தாலும் கவலைப்படாதவர்கள்.  உங்களின் மன உறுதியைக் கண்டு பொறாமைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகமிக அதிகமாக ஆசை கொண்டவர்கள். சுறுசுறுப்பு  குறைந்தாலும் கல்வி, கேள்வி விஷயங்களில் அதிக அளவு திறமை கொண்டவர்களாகவும் வீரியம் மிக்கவர்களாகவும் காணப்படுவீர்கள். மனதில் உறுதியான  ஸ்திரமான நிலையான எண்ணங்கள் இல்லாவிட்டாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அதிகமான செல்வங்களுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
    இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு போதனைசெய்வதை விரும்புவார்கள். ஆனால் மற்றவர்கள் இவர்களுக்கு அறிவோ, புத்தி மதியோ, முன்யோசனையோ சொல்லக்கூடாது. மேலும் இவர்களிடம் கற்பனை வளம் அதிகமாக இருக்கும். ஒருசிலர் உயர்ந்த பத்திரிகையாளர்,  எழுத்தாளர், கவிஞர், கலைஞர்களாக இருப்பர்.  ஒருசிலர் நாத்திகம் பேசிக்கொண்டு விதண்டாவாதம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அது அவரவர் சுய ஜாதக பலாபலனைப் பொறுத்தது.  உணவு சம்பந்தப்பட்ட விஷயம் பெண்கள், சம்பந்தப்பட்ட படிப்பு, கடல் ஊராக அலைந்து பார்க்கும் தொழிலில் அழகு சம்பந்தப்பட்ட துறைகளில் மிகவும் முன்னேறி பெயரும், புகழும் எடுப்பவர்கள் கடக ராசிக்காரர்களே!
     கடக ராசிக்காரர்கள் அடிக்கடி ஊர் சுற்றிப்பார்க்க விரும்புவார்கள். ஊர் ஊராக அலைந்து பார்க்கும் தொழிலில் இறங்கி உலக  விஷயங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள். ஆனால் எதுவுமே தெரியாததுபோல அமைதியாக  இருந்து தன்னலம் பாதுகாத்துக் கொள்வார்கள்.
     ஆண்டு துவக்கத்தில்  குருபகவான் உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார்.  அவர் 4-7-2015  வரையில் அமர்ந்திருப்பார். அதுவரை செய்யும் முயற்சியில் தடை தாமதங்கள் அதிகம் ஏற்படும். சிலருக்கு கணவன் - மனைவி  உறவில் பிரச்சனைகள் வரக்கூடும். இப்போது  மனைவி மக்கள் தேவையைப் பூர்த்திசெய்வதில் தடை தாமதங்கள் வந்து நீங்கும்.  எனவே   நன்கு  தெரிந்தவர்களைத் தவிர மற்றவர்களை வீட்டினுள்  அனுமதிக்காதீர்கள்.  அரசுப் பணியில் உள்ளவர்கள் மாறுதல் கேட்பதை 5-7-2015 வரை தள்ளிப்போட வேண்டும்.  மறதியைத் தவிர்க்க சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். ஒருசில அரசு ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் போன்ற தண்டனைகளை அடையலாம்.
      5-7-2015ல் குரு பகவான் உங்கள் ராசியான கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்து சேரும். வேலை தேடும் இளைஞர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மத்திய, மாநில அரசுகளில் உத்தரவை எதிர்பார்த்து இருப்போருக்கு உத்தரவு வந்துசேரும்.
     5-07-2015  முதல் அடுத்த ஆண்டு பிற்பகுதி வரையிலும் குரு பகவான் அள்ளித்தரப்போகிறார். இனிப்பு, ஜவுளி, கண்ணாடி ரசாயனம், மருந்து ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் லாபம் கிட்டும். நல்ல வாய்ப்புகளும் தேடிவரும்.  புத்திர பத்திரிகளால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஒரு சிலர் அயல்நாடு சென்று கல்விபயில்வார்கள். எதிர்காலம் நல்ல நிலையில் உள்ளது. ராஜயோகத்தை அடைவார்கள்.
     குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும்.  அரசுப் பணி வராதா என்று ஏங்கிய ஒருசிலர் உயர்பதவிக்கான உத்தரவுகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட பாக்கியங்களை அள்ளிப்பருகுவீர்கள்.
    ஒருசிலர் புதிய வீடு, மனை வாங்கிக் குவிப்பார்கள். உடன்பிறந்தோர், மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். சொத்து பிரச்சனைகளில் சுமூக முடிவு ஏற்படும்.  ஒருசில இளைஞர்களுக்கு வேறு மாநிலத்தில் அரசுப் பணி வரும். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும்.  வீண் சிக்கலையும், சிரமத்தையும் தவிர்க்க அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
   சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான விருச்சிக ராசியில் உள்ளார். 2017 வரையிலும் அவர் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் தான் இருப்பார். உங்கள் பிள்ளைகள் சம்பந்தமாகவும் தொல்லைகளை அனுபவித்திருப்பீர்கள்.
29-7-2015 வரை சனி பகவான் வக்ரம் பெறுகின்றார். மற்ற கிரகங்களின்  தாக்கத்தினால்  நன்மைகள் உண்டாகும். இந்தக் காலகட்டத்தில் பொன், பொருள், கிடைக்கும். மகிழ்ச்சி மனதில் அதிகரிக்கும். பெண்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
   மற்றொரு நிழல் கிரகமான கேது பகவான் உங்கள் ராசிக்கு 9ல் மீனத்தில் உள்ளார். அவரும் 7-1-2016 வரை நல்ல பொருளாதார வளத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பார்.  8-1-2016ல் 8ஆம் இடமான கும்ப ராசிக்குச் செல்கிறார். சிலரது வீட்டில் பொருட்கள்  களவுபோகவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் விழிப்போடு செயல்படுங்கள்.
     உடன்பிறப்புகளாலும், அவரது மனைவியாலும் வீண் பிரச்சனைகள் உருவாகும்.  5-7-2015 முதல் குரு அருளால் நினைத்த காரியம்  நடக்கும். ஒருசிலருக்கு செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றம் இலாகா மாற்றம் உண்டாகும்.
3-12-2015 முதல் 22-12-2015 வரை தைரியமும், விவேகமும் சற்று குறையும் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி வாய்ப்பை அடைவது கஷ்டமாகும். தூரதேசப் பயணம் சிலருக்கு பாதகமாக இருக்கும்.  ஒருசிலருக்கு  உஷ்ண சம்பந்தமான நோய் கடுமையாக பாதிக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். ரசவர்க்கம், இனிப்பு, புளி வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலனை அடைவார்கள்.
 பெண்கள்
   பெண்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து சென்ற பெண்கள் கணவரரோடு  சேர்ந்துவாழ்வார்கள்.  நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
 தொழிலதிபர்கள், வியாபாரிகள்
    தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலர் தங்கள் தொழிலை வங்கி உதவியுடன் விரிவாக்கம் பெருக்குவீர்கள்.  எதிரிகளால்  தொல்லைகள் ஏற்பட்டாலும் அதனை  முறியடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள்.  கொள்முதலைவிட கூடுதல் லாபத்துக்கு அனைத்து சரக்குகளையும் விற்பனை செய்வார்கள். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள்.
மாணவர்கள்
  குரு ராசியில் உள்ளதால் மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் படிப்பில் மிகவும் கவனத்துடன் படிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் குரு பகவான் உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளார். எனவே கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.
புனர்பூச (4ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
  சித்திரை முதல் ஆடி வரை 6 பங்கு லாபம் வருகிறது. ஆவணி முதல் கார்த்திகை வரை  2 பங்கு லாபம் சேமிப்பு குறையும். புதிய கடன் வாங்கமாட்டீர்கள்.
பூச நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரை 1 பங்கு லாபம் வருகிறது. எனவே வாழ்க்கையில் செளபாக்கியமும் தனலாபமும் எதிர்கால யோகமும் கிடைக்கும்.
ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு
   சித்திரை முதல் ஆடி வரை 4 பங்கு லாபம் வருகிறது. எனவே திட்டமிட்டபடி நீங்கள் அனைத்துப்பொருட்களையும் வாங்குவீர்கள்.
   ஆவணி முதல் கார்த்திகை வரை 1 பங்கு லாபம் மட்டும் வருகிறது. எனவே சிக்கனமாக இருக்க வேண்டும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
      ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு எலுமிச்சைப் பழ தீபமேற்றி வரவும். ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முடிந்த வரை பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.  ஒவ்வொரு நாளும் சூரிய நமஸ்காரம் செய்திட வேண்டும். அல்லது ஆதித்ய ஹிருதய மந்திரத்தை தினமும் ஜெபிக்க வேண்டும். குரு பகவானையும் ஆஞ்சனேயரையும் வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்ய வேண்டும்.
வாழ்க வளமுடன்