விருச்சிகம்

 12 ராசிகளுக்குமான 2015 மன்மத வருட ராசிபலன்கள்

மேஷம் - ரிஷபம் - மிதுனம் - கடகம் - -சிம்மம் - கன்னி

2015 – 2016 ஆ‌ம் ஆ‌ண்டிற்கான மன்மத வருட ராசிப் பல‌ன்களை

 விருச்சிகம்
 (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
 விருச்சிக ராசி அன்பர்களே!
      உலகத்தின் சட்டதிட்டங்களை நன்கு அறிந்துவைத்திருப்பவர்கள் நீங்கள்! எப்பொழுதும் சுறுசுறுப்பும், ஊக்கமும், மனதை தைரியமும் கொண்டவர்கள். எடுத்த காரியங்களை அரும்பாடுபட்டாவது முடிக்க வேண்டும்.  யாருக்கும் எப்பொழுதும் அடங்கி நடக்க விரும்பாதவர்கள்.
    கல்வியில் திறமையும் அதிக புத்திக்கூர்மையும் தந்திர வித்தையும்,  இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.  யாருக்கும் எப்பொழுதும் பயப்பட மாட்டீர்கள். உங்களுடைய ஆர்வம் எப்பொழுதும் பெளர்ணமிபோல ஆரம்பிக்கும். முடிவில் தேய்ந்து அமாவாசை நிலவுபோல் ஆகிவிடும்.  சோம்பல் தன்மை உங்களிடம் குடிகொண்டிருக்கும்.
    எவ்வித கஷ்ட நஷ்ட இடையூறு இடைஞ்சல்கள், இன்னல்கள் வந்தாலும் உங்கள் கொள்கையை ஒருபோதும் நீங்கள் விட்டுக்கொடுக்கமாட்டீர்கள். இது உங்கள் பிறவிக்குணம்.
உங்களது விதிப்படி  தாய்  தகப்பனார் சம்பாதித்துவைத்த சொத்துகளை அனுபவிக்கும் யோகம் உண்டு. தகப்பனார் வழி சொத்துக்களை நீங்கள்  பாதுகாக்கமாட்டீர்கள்.
     உங்களது சுயசம்பாத்தியத்தில் மாட மாளிகை கூட கோபுரபோன்ற அழகான வீடுகட்டி குடியேறுவீர்கள். தஞ்சை புஞ்சை வயல் வெளிகள் தோட்டங்கள் என்று வாங்குவீர்கள்.
        உங்களுடைய கல்வி தொழில் சம்பந்தப்பட்ட கல்வியாகவே இருக்க வாய்ப்புண்டு. உங்கள் நலத்தைப் பொறுத்தவரை எப்பொழுதும் ஆரோக்கியமாகவே காணப்படுவீர்கள்.
         உடலில் வெட்டுக்காயம் தீப்புண் காயங்கள், உஷ்ணக் கட்டி போன்றவை வந்து மறையும்.  எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் அதைப்பற்றி எள்ளளவும் கவலையோ, கலக்கமோ பீதியோ பயமோ, இல்லாமல் சிந்தித்துப் பார்த்து தீர்க்கமாக ஆராய்ந்து சுலபமாக முடிவெடுத்து பிரச்சினைகளைத் தீர்த்துவிடுவீர்கள்.
 சகல கலைகளையும் அறிந்து தெரிந்து வல்லவராக இருப்பீர்கள். எதையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உங்களிடம் அதிகமாக இருக்கும். உங்களுடைய பேச்சால்  மற்றவர்களை எளிதில்  துன்பப்படுத்திவிடுவீர்கள்.  விவேகம் உலகை ஆளும் என்ற வித்தை தெரிந்தவர்கள்.
4-7-2015 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ல் இருப்பார். அதுவரையிலும் வாழ்க்கையில் வசந்த காலம் புதன் பகவான் வீட்டிலிருக்கும் அவர் தன் சொந்த வீட்டை 7ஆம் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தொழில்வகையில் ஏற்பட்ட விரோதம் நீங்கி ஒற்றுமை நிலவும்.  இதுவரையில் இருந்து வந்த  தடை நீங்கும். வயது வந்த பிள்ளைகளிடம் கோபமாகப் பேசக்கூடாது. திருமண வயதுவந்த ஆண் பெண் இருபாலரையும் கண்காணிக்க வேண்டும்.  அவர்கள் காதல் திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம்.
   05-07-2015   முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10ல் சிம்மத்தில் வருகிறார். ராசிக்கு 10ஆம் இடம் என்பது ஜீவனஸ்தானம் குரு 10ல் வருவது சிறப்பில்லை என்றாலும் உங்கள் சுயஜாதகத்தில் நல்ல இடத்தில் இடம்பெற்றிருந்தால் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்கமாட்டீர்கள்.
    5-7-2015  முதல்  எதிலும் சிக்கனத்தைக் கையாள வேண்டும். வருமானம் முன்புபோல்  இல்லாமல் சற்று குறையும்.  மளிகைக் கடை நடத்துபவர்கள் இந்த ஆண்டில் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.  குருபகவான் பொருள் விரயம் ஏற்படலாம்.இழைப்பையும் மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமையும். அதன்மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். 
   சனி பகவான் உங்கள் ராசியில்  உள்ளார். அவரால் ஒருசிலருக்கு உடல் உபாதைகள் வரலாம். சனி பகவான் தான் நிற்கும்  இடத்திலிருந்து 3,7,10ம் இடங்களைப் பார்க்கிறார்.   அதன் மூலம்  பொருளாதார வளத்தைப் பார்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது. இது உங்களுக்கு சாதகம் மேலும் அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்புண்டு.
        சனி பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்மச் சனியாக உள்ள  இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதால் கருத்து வேறுபாடுகள் வராமல் தவிர்க்கலாம். மற்றவர்கள் உங்களுக்கு உதவுவதாக கொடுத்த வாக்கை நம்பி தொழில் செய்யக்கூடாது.  இந்தக் காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கிட சனி பகவானை வணங்க வேண்டும்.  பெண்கள் சனி பகவானை வழிபட்டால் கணவருக்கு நல்ல  திருப்பங்கள் வரும் 17-05-2015க்குள் உங்கள் வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் தொடரும்.  உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேர்ச்சிபெற்று   உடனடியாக வேலைவாய்ப்பையும், பெறுவார்கள்.  வியாபார முடக்கம் நீங்கி வருமானம் கூடும். பழைய கடன்கள்  பைசலாகும்.  விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும்.
   7-1-2016 வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ல் உலா வருகிறார்.  பொதுவான விதி 11ல் ராகு வந்தால் உங்கள் சுய ஜாதகத்தையும் குடும்ப லாபம் தரும்.  ஒருசிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வந்துசேரும்.  பொன் நகைகளை வாங்கிச் சேர்க்கலாம். அல்லது காலி மனையில் முதலீடு செய்யலாம். உழைத்துச் சேர்க்கும் பணம் விரயச் செலவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு மலச்சிக்கல் போன்ற பிணிகள் வரும்.  தானுண்டு தன் வேலையுண்டு என்று செல்ல வேண்டும். உடன் பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாகப் பழக வேண்டும்.
   7-1-2016 வரை கேது பகவான் உங்கள் ராசிக்கு 5ல் வருவதால் யோகம், உண்டாகும்.  5ல் கேது உள்ள இந்த நேரத்தில் நண்பர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படுவர். உங்கள் அருகில் உள்ளவர்களிடம் மிகவும் அனுசரணையாகச் செல்ல வேண்டும். 
   புதிய ஒப்பந்தங்கள் புதிய முயற்சிகள் செய்யும்போது அந்த அலுவலகத்தில் சரியான வழிமுறைகளை எழுதிவாங்கி பின்பு செயல்பட வேண்டும்.  கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். ஒருசிலர் வெளிநாடுகளில் அதிக லாபத்துடன் கூடிய தொழிலைச் செய்வார்கள்.
பொதுவாக 5ல் உள்ள கேது, நாம் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்தால்தான் கெடுதல் செய்வார்.  திருமணம் முடியாதவர்களுக்கு வரன் வந்துசேரும்.  தொல்லை கொடுத்த வழக்குகள் சாதகமாகச் செல்லும்.
பெண்கள்
   4-7-2015  வரை வீட்டுச் செலவுக்குரிய பணம் தடையின்றிக் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். மனதில் பட்டதையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
     தொழிலதிபர்களும், வியாபாரிகளும் சிறப்பான பலனை  அடைவார்கள்.  தற்போது உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெற்று வருகிறது.  அதிக முதலீடு போடக்கூடாது. அரசுவகையில் எதிர்பார்த்த சலுகைகள் 4-7-2015 க்குள் கிடைக்கும். கடுமையான போட்டி இருக்கும்.
மாணவர்கள் 
     மாணவர்கள் இந்தக் கல்வியாண்டியில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அடுத்த கல்வியாண்டில் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குருவின் பார்வைகளால் உங்கள் விடாமுயற்சிக்குத் தகுந்த மதிபெண்களைப் பெறலாம்.
விசாக (4 ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும் 1 பங்கு லாபம் உண்டு.  சேமிப்பு நிலை உயரும். தக்க நேரத்தில் அது பயன்படும்.
     ஆவணி முதல் கார்த்திகை  வரையிலும் 4 பங்கு ஆதாயம் உண்டு. எதிர்காலம் யோகத்தோடு இருக்கும். 
 மார்கழி முதல் பங்குனி வரையிலும் 4 பங்கு ஆதாயம் உண்டு.  தனலாபம் உண்டு. எதிர்காலம் யோகத்தோடு இருக்கும்.
அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு
     சித்திரை முதல் ஆடி வரையிலும்  கூடுதல் வருமானம் 4 பங்கு வரும். சேமிப்பை உயர்த்துவீர்கள். வேண்டியது கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.   
    ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் சீராக  உள்ளது. எனவே சிக்கனமாகச் செலவுகள்  செய்ய வேண்டும்.
   மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் 2 பங்கு உள்ளது. எனவே எதிலும் நிதானித்துச் செயல்பட வேண்டும்.
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும் 7 பங்கு வருமானம் உள்ளது.  எனவே நிதானமாகச் செலவுகள் செய்வதால் சேமிப்பு உயரும்.
        ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் கூடுதல்  வருமானம் வரும். புதிய தொழில்கள் உங்களுக்கு லாபமாக அமையும்.
      மார்கழி முதல் பங்குனி  வரையிலும் செலவுகள் உண்டாகும். செளபாக்கியம் உங்களுக்கு  ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோகமாக அமையும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
     பிரதோஷ காலங்களில் நந்தி பகவானை தரிசித்து உங்கள் குறையைச் சொல்லி வேண்டி வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். சனிக்கிழமையன்று காக்கைக்கு சாதம் வைப்பதுடன், சனீஸ்வரர் ஆலயம் சென்றுவருவது சிறப்பு தரும்.
வாழ்க வளமுடன்.