2015 – 2016 ஆம் ஆண்டிற்கான மன்மத வருட ராசிப் பலன்களை
மீனம்
பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசி அன்பர்களே!
இறைநம்பிக்கையும் ஆன்மிக பலமும் நிறைந்தவர்கள் நீங்கள் உறுதியான மனமும், திடமான நம்பிக்கையும், தன்னடக்கமும் ஒருங்கே கொண்டவர்கள்.
எந்த ஒரு விஷயமும் முழுமையாகத் தெரியாமல் எல்லாம் தெரிந்ததைப் போல பேசுபவர்கள். இவர்களுக்கு யாராவது புத்திமதி சொன்னால் பிடிக்காது. இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு போதனை செய்வதையே விரும்புவார்கள்.
தரம், அந்தஸ்து தகுதி பார்த்தே பழகுவார்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். உணவின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். புளிப்புச் சுவையின் மீது அதிக ஈடுபாடு இருக்கும்.
மனதில் நிறைவேறாத ஆசைகளை வளர்த்துக் கொள்வீர்கள். உலக விஷயத்தில் பலர் எப்பொழுதுமே கிணற்றுத் தவளைதான். அதை ஒருக்காலும் ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள். உங்கள் சிந்தனை ஓட்டம் எப்போதுமே தாய்வீடு, தாய்ப்பாசம் தம்பி, தங்கைகள் என்றே இருக்கும். அதிக கனவுத் தொல்லைகளால் அவதிப்படுவீர்கள்.
இந்த மன்மத ஆண்டில் குரு பகவான் 4-7-2015 வரை உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் உள்ளார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்திவைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார்.
குரு பகவான் சஞ்சரிக்கும் 5ஆம் இடம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம். குலதெய்வத்தின் அருளும், குருவின் அருளும் கிடைக்கும். ஒருசிலர் பூர்வீகத்தில் புதிய வீடு கட்டுவார்கள். பிரிந்து சென்ற தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்து வழக்குகளை சந்தித்து வருகிறவர்கள் வழக்குகளை விலக்கிக் கொண்டு ஒன்று சேர்வார்கள்.
வங்கிக்கடனை அரசு மானியத்துடன் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்களுக்கு எட்டாக் கனியாக இருந்துவந்த பதவி வலிய வந்துசேரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும். பழைய கடன்பாக்கிகள் பைசலாகும். தேர்வில் வெற்றியடைந்து, உயர்பதவிக்கான உத்தரவையும் பெறுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 6ல் சிம்ம வீட்டில் குரு பகவான் 5-7-2015க்குப்பின் சஞ்சரிக்கிறார். ஏனெனில் அவர் 5ஆம் பார்வையாக தன் சொந்த வீட்டைப் பார்க்கிறார். குரு ஒரு ராசியில் அமர்ந்து தன் சொந்த வீட்டைப் பார்த்தால் அவர் 12 ராசிக்காரர்களையும் அதிகமாக பாதிக்கமாட்டார்.
குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக நீங்கள் அதிகம் உழைப்பீர்கள். ஒருசிலர் அரசு மானியத்துடன் வங்கிக்கடனைப் பெறுவார்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும், மரியாதையும் உருவாகும். பழைய கடன்பாக்கிகள் பைசலாகும்.
குரு பகவான் 5-7-2015க்குப்பின் உங்கள் ராசிக்கு 6ல் சிம்ம வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு 6ல் உள்ள காலம் வாகனங்களின் மிகவும் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும். ஒருசிலருக்கு கை, கால்களில் பந்தனம் ஏற்படும். கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு சாதகமற்ற நிலையிலுள்ளார் என்றாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் விருச்சிக ராசியில் அமர்ந்து 3,7,10ஆம் பார்வையாகப் பார்க்கிறார். 7ஆம் இடத்துப் பார்வையால் காரிய அனுகூலமும் பொருளாதார வளமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் விருத்தியும் ஏற்படும். 10ஆம் இடத்துப்பார்வையால் பகைவர்களின் சக்தியை முறியடிப்பீர்கள். உங்களது ஆற்றல் மேம்படும். உங்களுக்கு பலவகையிலும் மதிப்பும், மரியாதையும் கூடும்.
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7ல் உள்ளார். இப்போது நீங்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் உள்ளவர்கள் ஓரளவு நன்மைகளை அடைவார்கள்.
பொதுவாக 7ல் உள்ள ராகு அளவில்லாத பொருட்செல்வத்தை தருவார். ஆண் - பெண் இருபாலருக்கும் நல்ல வரன்கள் அமையும். அரசுப் பணியில் உள்ளவர்கள் நினைத்த இடத்திற்கு பணப்புழக்கம் கூடும்.
தங்க நகை வியாபாரம் செய்கிறவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். தீயவர்கள் உங்கள் சேமிப்புகளை லாபமில்லாத வகையில் முடக்கப்பார்ப்பார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலில் செல்வார்கள். ஏற்கெனவே வெளிநாடு சென்றுள்ளவர்கள் இன்னும் அதிகமான சம்பளத்துடன் கூடிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
பெண்கள்
பெண்கள் மிகவும் நிதானமாகவும் சிக்கனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். கணவருடன் கருத்து வேறுபாடு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பொன், பொருள் நகை வாங்கிச்சேர்ப்பீர்கள். வேலைக்குப்போகும் பெண்கள் அதிக சலுகைகளை அடைவார்கள்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 4-7-2015க்குள் புதிய தொழில் துவங்க அனுகூலம் உண்டு. கடல் வாணிகம், டீசல், பெட்ரோல், வாசனை திரவிங்கள், பாதரசம் விற்பனை செய்கிறவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மாணவர்கள்
மாணவர்கள் 5-7-2015க்கு முன்பு நடக்கும் இந்த கல்வியாண்டில் அதிக மதிபெண்களைப் பெறுவார்கள். அதன்பிறகு கல்வியில் மிகவும் கவனம் தேவை.
பூரட்டாதி (4-ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
சித்திரை முதல் ஆடி வரையிலும் 7 பங்கு வருமானம் உள்ளது.
ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் சிறப்பாக இல்லை. எனவே மிகவும் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். கடந்த காலத்தில் சேமித்தது இப்போது உங்களுக்குக் கைகொடுக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு
சித்திரை முதல் ஆடி வரையிலும் 7 பங்கு வருமானம் உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் சிறப்பாக இல்லை. எனவே மிகவும் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும்.
மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் உண்டு. கூடுதல் வருவாயைப் பெற சிறப்பாக உழைக்க வேண்டும்.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு
சித்திரை முதல் ஆடிவரையிலும் 2 பங்கு லாபம் உண்டு. குடும்பத்தில் வருமானம் சேமிப்பு கூடும். பொருள் வாங்கிட போட்ட திட்டம் நிறைவேறும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானத்திற்கு குறைவில்லை. எப்போதும் போல குடும்பச் செலவுகள் இருக்கும்.
மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் உள்ளது. கடந்த காலங்களில் உள்ள சேமிப்பு இப்போது உங்களுக்கு கைகொடுக்கும். எதிர்காலம் நல்ல பலன்களைத் தரும். தனலாபம் உண்டு.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவருவது நல்லது. மேலும் 27 கறுப்பு கொண்டைக்கடலை எடுத்து அதனை மஞ்சள் துணியில் முடிந்து பூஜையறையில் வைத்து இந்த ஆண்டு முழுவதும் வணங்க நல்ல பலன்களை அடைவீர்கள்.
வாழ்க வளமுடன்