குருப் பெயர்ச்சி பலன்கள் 2015- 2016
கும்ப ராசி
அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதம் )
குபேரராய் வாழும் எண்ணமும், தயான குணமும் கொண்ட கும்பராசி அன்பர்களே!
ராசிக்கு 2க்கும் 11க்கும் உடைய குரு7ல் நிற்பது மெத்த நலம். குருபகவான் சாரம் கேது, அவர் இரண்டிலிருப்பது தனம், வாக்கு, குடும்பம் நலம், நிதி, நீதித்துறை, மருத்துவ இரசாயனப் பணிகள், குடும்பத்தினரால் அனுகூலமும் கல்வியாளர்கள், உயர்கல்வி, இஷ்ட தெய்வ குலதெய்வ வழிபாட்டால் ந்ன்மைகளை அடைந்து நலம் பெறுவர்.
வாழும் திறனால் வையம் போற்றும், இதுவரையிலிருந்த சொந்த விரோதங்களும், பகையும், பொல்லாப்பும் பொடிப் பொடியாகும். உங்கள் எண்ணத் திரையில் கலை என்னும் மாதா குடிகொண்டு சின்னத்திரை சினிமாவில் ஜொலிக்க காண்பீர்கள். நின்றுவிட்ட காதல் மலரும். திருமணம் நறுமணமாகும். வியாபாரங்கள், கொடுக்கல், வாங்கல்,தங்கு தடையில்லாமல் நடக்கும். மனைவியினால் ஆதாயப் பலன்களும் நலன்களும் உண்டாகும். உத்தியோகம் செல்வாக்கு, உயர்பதிகளும் கிடைக்கும். சும்மாயிருந்த நீங்கள் உயர்நிலைக்கு வருவீர்கள். தாழ்த்தியவர்கள் வீழ்வார்கள். தாய் வகைச் சொத்துகளும் நின்ற தொகையும், வகையாய் வந்து சேரும்.
பகையாய் நின்றவர்களும் கூடி வருவார்கள். காலம் தாழ்த்தி சாப்பிடுவதைத் தவிர்க்க நலம். பாதகாதிபதியான 9க்கும் உடைய சுக்கிரன் திருமணத் தடையையும் மாற்றங்களும் உண்டாக்கினாலும் மேஷ குருஅம்சத்தில் திருமணத்திற்கு மோசம் செய்யமாட்டார். நேசமாய் பாசமாய் மலரும் திருமணங்கள், தந்தை மகன் இணக்கம் பேணுங்கள். மதிப்பு தாருங்கள். மூத்தவர்க்கெல்லாம் ஆசிகள் கிடைக்கும்.
ராசிக்கு 10ல் சனி அம்ச யோகத்தில் உள்ளனர். எனவே கிராம, நகர பொருப்புக்கள், மனைவி மக்களுடன் கூட்டுத்தொழில் செய்ய நேரம் கனிந்து நிற்கிறது. மருமணம் புரிய வாய்ப்புகள் உண்டு. ஆலயம், தர்ம சாலை அனாதை ஆசிரமம் நடத்துபவர்கள், சிறக்கும்படி இருக்கும். உங்கள் மேதாவித்தனம் சிறந்து விளங்கும். அவர்களுக்கு நல்ல வரங்கள் அமையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும்படியுள்ளது. அவர்களை சமாதானமாக நடத்தி திருப்தியடையுங்கள். இக்காலம் கோள் நிலைக்கு ஆதரவு தந்துள்ளது.
நண்பர்களுடன் மனைவியின் உறவுகளிடனும் சேர்ந்து தொழில் புரியலாம். மருத்துவம், இரும்புத் தொழில், இரசாயனம் பெட்ரோலியப் பொருட்கள், விவசாயம் கால்நடை வளர்ப்பு, கூலித் தொழில் புரிவோர்கள், அரசாங்கப் பணியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோர் நலம் பெறும் வாய்ப்புண்டு. என்றாலும் சூரியனும், சனிபகவானும், தந்தை மகனாயிருந்தாலும் பகைவர்கள் என்பதால் சொந்த பந்தம் வீடு, வாகனம், அரசுப் பணிகள் முடங்கி மடங்கியே சீர்பெறும்.
சில வழிபாடுகளும் பைரவரை ஞாயிறு நாளில், அரளி மாலையுடன் வெண்பூசணியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஏழைகளுக்கு உணவு அளித்து வந்தால் எண்ணியது இனிதென நடக்கும். மனைவியின் உறவுகளில் திருமணங்கள், அவர்கள் கலை உலகில் இருந்தால் புதிய ஒப்பந்தம், பத்திரிகை, கமிஷன் வகைத் தொழில், ஹோட்டல், உணவுப்பொருள் மளிகை விற்பனைகளும் சிறந்து நடக்கும்.
கும்ப ராசிக்கு சுக்கிரன் ஒரு வகையில், பாதகம் செய்வார். சில நாட்கள் தாய், தந்தைச் செலவுகள், வாகனச் செலவுகள் உறவுகள் பாதகமாகும். பின் சீர்பெறும் பெண்ணுக்கு தூக்கமின்மை கர்ப்பப்பை சம்பந்தமான சிறு தொல்லையும் வந்து போகும். பயப்பட வேண்டாம். பகலும், இரவும் மாறி மாறி வருவது போல் இன்பமும் துன்பமும் சகிக்க பழகுகள்.
மைத்துனர்களுக்கு புத்ர பேறு தடைபடும். மகாலட்சுமியையும் கரு காக்கும் திருகல்கருகாவூர் அன்னை கர்ப்பரட்சகாம்பாளை வேண்டிட மீண்டும் பிள்ளை வரும் தொல்லையில்லா, அம்மனை வழிபட்டு உய்ய வேண்டும். உங்கள் பையனுக்கு நல்ல தொழில் அமர்வுகளும், தொழில் தொடர்பு, கணினித் தொழில், எழுத்துக்கலை, டெக்ஸ்டைல்ஸ், கைவினைப் பொருட்கள் உற்பத்தி, விற்பனைகள் சிறந்து விளங்கும். சிலர் மனம் போனபடி போய், சிக்கலில் மாட்டிட வேண்டாம். சொத்துக்கள் வாங்கும் போது வில்லங்கமில்லமல் பார்ப்பது அவசியம்.
தொழிலில் வெற்றிகள் தொற்றிவரும். பைபையாய் பணம் சேரும். பை நிறையும். தற்காலம் குருவின் சாரநாதன் சுக்கிரனில் உள்ளது. வாக்கில் பேச்சில் நிதானம், மனைவி, தாய், தந்தை உறவுகள் நட்பு வட்டம் ஏதேனும் வகையில் தொந்தரவுகள் உண்டுபண்ணும். உறவுகள் வலிப்பெற்றல், உடல் மனம் சீர் கெடும். கோமாதாவிற்கு அகத்திகீரை வெல்லம் கலந்து அரிசி கொடுக்க நலம். இது காலம் சனி, செவ்வாய், இருக்க, இராணுவம், இரும்பு சம்பந்தமான தொழில், கட்டுமானத் தொழில், மருத்துவத் தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்புகள், கல்வித்துறை, மீன் சார்ந்த துறை, எலக்ட்ரானிக் பொருள் சார்ந்த விற்பனையாளர்கள், ரியல் எஸ்டேட் செய்வோர்களும் சிறந்து விளங்கும் தருணம்.
தாய்வகை சொந்தகளில் திருமணம் நடக்கும். குருபகவான் அருள்பார்வை 11ம் இடம், 1ம் இடம் 3ம் இடங்களை பார்வை செய்வது தன்னலம், மக்கள் நலம், சகோதரர்கள் நலம், காரிய வெற்றி, தைரியம் வீரியம் உண்டாகும். மனத்துக் சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். மகாகணபதி வழிபாடுகள், தந்தை, தாய் தன்னலம், வாகனம், வீடு,தொழில், கால்நடைகள் விருத்தி பெறும்.
பரிகாரம் ::
பிரதோஷம் அன்று சிவ பெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்ய வேண்டும் , வியாழன் தோறும் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டகடலை மாலை போட வேண்டும் நல்லது நடக்கும் .
வாழ்க வளமுடன்
|