மேஷம்

12 ராசிகளுக்குமான 2015 மன்மத வருட ராசிபலன்கள்

மேஷம் - ரிஷபம் - மிதுனம் - கடகம் - -சிம்மம் - கன்னி



2015 – 2016 ஆ‌ம் ஆ‌ண்டிற்கான மன்மத வருட ராசிப் பல‌ன்களை
 மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய)
 மேஷ ராசிக்காரர்களே!
   கம்பீரமான தோற்றமும்  நடுத்தர உயரமும் கொண்டவர்களாக இருப்பீர்கள்.  மனோதைரியமும், அஞ்சாநெஞ்சமும் கொண்டவர்கள். நீரையும், பாலையும் தனியாகப் பிரிக்கும் அன்னப் பறவையைப்போல் நட்பு கண்டு பழகுபவர்கள் நீங்கள்.
    உங்களது தலை அல்லது முகத்தில் மச்சம், தழும்பு அல்லது வெட்டுக்காயம் போன்ற வடு அல்லது இயற்கைக் குறியீடுகள்  இயற்கையிலே அமைந்திருக்கும். உலக விஷயம் எதுவானலும் சரி; வீட்டு  விஷயம் எதுவானலும் சரி எல்லா விஷயத்திலும் பொது அறிவு உங்களுக்கு நிரம்பவே இருக்கும். எந்த விஷயத்தைப் பற்றி யார் கேள்வி கேட்டாலும் உடனேயே பதில் சொல்லும் முன்யோசனை உடையவர்கள்.
  நீங்கள் எந்த  ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் பலரிடமும் ஆலோசனை கேட்பீர்கள். நூறு பேரிடம் யோசனை கேட்டாலும் உங்கள் முடிவே உன்னதமானது. மாறாக  முகத்தில் அறைந்தாற்போல நேருக்கு நேர் கூறும் சுபாவமுடையவர்கள். இதனால் பல பேருடைய வெறுப்புகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளாவீர்கள். மற்றவர்களின் வெறுப்புகளைப் பற்றி ஒரு பொழுதும் நீங்கள் கவலைப்படமாட்டீர்கள்.  உங்களிடம் யார்  அன்பு காட்டுகிறார்களோ அவர்களுக்காக, எந்தத் துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்டு வாதாடி, போராடி சாதனை படைக்கத் தயங்கமாட்டீர்கள். எந்த ஒரு காரியத்தையும் உங்களைநம்பி ஒப்படைக்கலாம். எவ்வளவு பெரிய வேலைகளையும்  எளிமையாகச்  செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் நீங்கள்! தேவைப்பட்டால் தெய்வத்தைத் தேடித்தேடி வணங்குவீர்கள். மற்ற சமயங்களில் சாமி  கும்பிட்டால் காரியமாகாது என்று வீராப்பு பேசுவீர்கள். உங்களுக்கு பூர்வ புண்ணிய பூமி, சொத்துக்களை அனுபவிக்கும் யோகம் நிறைய உண்டு. எப்போதும்  ஏதாவது சிந்தனைகளிலே மூழ்கியிருப்பீர்கள் சிலசமயம் அதிக டென்ஷனுக்கு ஆளாவீர்கள்.
     உங்கள் வார்த்தை மிகவும் இனிமையாக இருக்கும். பண விஷயங்களில்  ரொம்பவும் கறார் பேர்வழிகளாக இருப்பீர்கள். உங்கள் குடும்ப உறவினர்களைவிட வெளிவட்டாரத்தில் செல்வாக்கு பழக்க வழக்கம் அதிகமாக இருக்கும்.  உங்கள் குடும்ப  சொந்தபந்தங்கள் பெயரளவுக்குதான் உதவி செய்வார்கள்.  தாய் - தகப்பனார் சகோதர வகைகளுக்கு நீங்கள் அதிகமாக  உதவிகளும் உபகாரங்களும் உபசரிப்பும் செய்வீர்கள். ஆனால் பிரதிபலனை எதிர்பார்க்கவோ விரும்பவோ மாட்டீர்கள்.
 கல்வித் துறையிலும் விளையாட்டுத்துறையிலும் முதலிடம் பிடிக்க அரும்பாடுபடுவீர்கள்.  அடிமைத் தொழில் செய்தாலும்கூட சொந்தத் தொழிலாகவே எண்ணி மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எப்பொழுதும் ஜலத்தைக் கண்டால் உங்களுக்கு பய உணர்வு வரும்.
  5-7-2015  வரையிலும்  மேஷ ராசி அன்பர்கள் பெரும்பாலானோர் சிரமத்தை அடைய நேரிடும். தீய வாழ்க்கை வாழ்பவர்கள் ஏதாவது ஒரு  பிரச்சினைக்காக சொந்த இருப்பிடத்தை விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். சிலருக்கு பழைய  பிரச்சனைகள் தலை தூக்கும்.
   மேஷ ராசி அன்பர்கள் குரு 4ல் உள்ள இந்த காலகட்டத்தில் வேறு நகரம் செல்வார்கள். ஒரு   சிலர் நூதன தொழில் துவங்குவார்கள். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள்.  குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது.  சிறு விபத்தி சந்திப்பீர்கள். பொதுவாக  மேஸ்த ராசி அனப்ர்கள் காரியங்களில் சற்று யோசித்துச் செயல்படவேண்டும். தேவையற்றவர்களின் நட்பை சற்று நீங்கள் உதறிட வேண்டும். தட்சிணாமூர்த்தியை தினசரி வணங்கிவர நன்மையுண்டு.
    குரு பகவான் 5-07-2015 முதல் கடக் ராசியிலிருந்து உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான சிம்ம ராசிக்குச் செல்வார். குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வருகிறார். பூற்வீக சொத்தில் புதிய வீடு கட்டுவார்கள். ஒரு சிலர் பூர்வீக வீட்டை மராமட்து செய்வார்கள்.   குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.  குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக நீங்கள் அதிகம் உழைப்பீர்கள்.   ஒருசிலர்  அரசு மானியத்துடன் வநிக் கடன்  பெறுவார்கள்.
 சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும். இதுவரை  வாட்டி வதைத்துவந்த நோய் குணமாகும்.  இளைய சகோதர சகோதரிகள்  நல்ல லாபத்தை அடைவீர்கள். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.  உயர்பதவிக்கான தேர்வு எழுதியவர்கள் வெற்றிபெறுவார்கள். சிம்மத்தில் குரு பகவான் வரும் காலம் நன்மை கிடைக்கும். 5ஆம் இடத்துப் பார்வையும் 7ஆம் இடத்துப்  பார்வையும் சாதகமாக அமையும். 5ஆம் இடத்துப் பார்வை உங்கள்  ராசிக்கு 9ஆம் வீடான தனுசுகளில் விழும். அதன்மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
   சனி பகவான் உங்கள் ராசிக்கு 8ல் உள்ளார். அஷ்டமத்துச் சனியால் நன்மைகள் செய்ய முடியாது. அவர் உங்கள்   முயற்சியில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும்.  எடுத்தேன் கவித்தேன் என்றில்லாமல் மிகவும்  நிதானமாகச் செயல்பட வேண்டும்.
   சனி பகவான் 8ல் உள்ள இந்த காலகட்டத்தில் சிலருக்கு உடல்  ஆரோக்கியம் பாதித்து பிறகு மருத்துவ உதவியால் நலம்பெறுவார். எந்த ஒரு வருவாயும் இல்லாமல் தவிக்க நேரும். இரவு நேரத்தில் தூக்கம் வராது. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். அதேபோல பதவி உஅய்ர்வும் வந்துசேரும். இப்போது நீங்கள் முக்கியமான கடன்களை அடைப்பீர்கள்.
   8-01-2016 முதல் ராகு பகவான் கன்னி ராசியிலிருந்து இடம் பெஉஅர்ந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். அலைச்சல் அதிகரிக்கும் ராகு ஒரு சிலருக்கு குடியிருக்கும் ஊரையோ, வீட்டையோ மாற்றுவார். 8-1-2016  முதல் புதிய பொருளாதார வாய்ப்புகள் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். குடும்ப பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும்  வெளிநாட்டில் வேலை செய்கிறவர்கள் நல்ல சம்பளத்தையும் லாபத்தையும் பெறுவார்கள். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டுவந்த நிலைமாறும்.  எல்லா முயற்சிகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உறவினர்களாலும் நன்மையுண்டு. உங்களை ஏமாற்றியவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.
   கேது பகவான் உங்கள் ராசிக்கு 12ல் இருப்பார். பொதுவாக 12ல் உள்ள கேது தேசாந்திரியாக்குவார் ஒருபொழுதும் விடியாத பிரச்சினைகளோடு வாழ வைப்பார். பொருள் விரயத்தையும் பகைவர்கள் தொல்லையையும் தருவார். 8-1-206ல் அவர் இடம்பெயர்ந்து உங்கள் ராசிக்கு 11ல் வருகிறார். இப்போது நீங்கள் நிதானமாகச் செயல்பட வேண்டும். முயற்சிகளில் தடைவரலாம்.  இதற்கெல்லாம் காரணம் உங்களிடம் உள்ள தீய பழக்களே என்பதை நீங்கள் உணர்வீர்கள். தவறை திருத்திக் கொண்டவர்கள் கெடுபலங்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவர் நீண்ட ஆயுளைப் பெறுவர்.
 கேது பகவான் உங்கள் ராசிக்கு 11ல் இருக்கும்போது உங்கள் செயல்களில் திட்டமிடுதல் இருக்க வேண்டும். ஜாமீன் கெயேழுத்து  போடக்கூடாது. விலையுயர்ந்த பொருட்களை  மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். *சகோதர சகோதரிகளிடையே பலமான கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். மேஷ ராசி அன்பர்கள் கேது பகவான் தங்கள் ராசிக்கு 11ல் இருக்கும் வரை அனைத்து காரியங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மன்மத வருடம் உங்களுக்கு நல்ல  திருப்பத்தை உண்டாக்கும்.
பெண்கள்
   குரு பகவானின் 7ஆம்  பார்வை  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகத்தைக் கொடுக்கும். ஆண்டின் பிற்பகுதியில் நகை, பணம் சேரும்.  வேலை செய்யும் பெண்கள் 5-7-2015-க்கு பிறகு அரசு சலுகைகளை எதிர்பார்க்கலாம். உடன் பிறந்த்தோரிடையே இருந்து வந்த பிணக்குகள் கிட்டும். நீங்கள் ஆசைப்பட்ட பொன்,பொருட்களை வாங்கிச்  சேர்ப்பீர்கள்.
தொழிலதிபர்கள்,  வியாபாரிகள்
   தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபத்துக்கு குறைவராது.  சிலர் வியாபார வ்ஷயமாக வெளிநாட்டுக்குச் ஹ்கெல்லும் வாய்ப்பு கிட்டும்.  அரசு வகையில் இருந்துவந்த பிரச்சினைகள் மறையும். அனுகூலமான போக்கு காணப்படும். மற்ற வியாபாரம் செய்கிறவர்கள் சராசரியான வருமானத்தைப் பெறுவார்கள் போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள்.
மாணவர்கள்
    5-7-2015  முதல் குரு பகவான் உங்களுக்கு சாதகமாக உள்ளார். எனவே நீங்கள் கல்வியில் உயர்வீர்கள். நீங்கள் விரும்பிய மேற்படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைக்கும்.
 அஸ்வினி  நட்சத்திரக்காரர்களுக்கு
   சித்திரை முதல் ஆடி மாதம் வரை 4 பங்கு லாபம் வருகின்றது. கூடுதல்  வருவாய் உள்ள நேரம்,  அனைத்து நிலைகளிலும் நீங்கள் உயர்வீர்கள்.
  ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 2 பங்கு லாபம் வருகின்றது. கடன்பட மாட்டீர்கள்.  நிதானமாகச் செய்ய வேண்டும்.
  மார்கழி முதல் பங்குனி வரை 2 பங்கு லாபமுண்டு. நிதானித்துச் செயல்பட வேண்டும்.
பரணி நட்சத்திரகாரர்களுக்கு
     சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை 7 பங்கு லாபம் வருகிறது. நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றியுண்டு.
     ஆவணி மாதம் முதல் கார்த்திகை வரை வருமானம் குறைவாக உள்ளது. மார்கழி மாதம் முதல் பங்குனி வரை 2 பங்கு லாபம் வருகிறது.
கார்த்திகை (1ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
      சித்திரை முதல் ஆடி வரை 2 பங்கு வரை லாபம் உண்டு. கஷ்ட ஜீவனம் வராது.
       மார்கழி மாதம் முதல் பங்குனி வரை வருமானக் குறைவு உள்ளது. சேமிப்பே உங்களுக்குக் கைகொடுக்கும்.
 ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
    மாதம்தோறும் மூல நட்சத்தில் ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை போட்டுவர நன்மையுண்டு . முடியாதவர்கள் அன்றைய தினம் குரங்குகளுக்கு தயிர்சாதம் கொடுக்கலாம்.  சனிக்கிழமைகளில் காக்கையை அழைக்காமல் வடகிழக்கு திசையில் சாதம் வைத்துவர அன்றுமுழுவதும் நல்ல பலன் கிடைக்கும். மன்மத வருஷத்தில் வளம் பெருகும்.
வாழ்க வளமுடன்