Cancer -Katakam-கடகம்-


குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016

  • கடக  ராசி
 ( புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் )
 கற்பனை வளம், பேச்சு ராஜவிசுவாசிக்காரராக விளங்கும் கன்னியம்மிக்க கடகராசி அன்பர்களே!
 உங்களின் ராசிக்கு 2ல் குரு, சுக்கிரன், 3ல் ராகு, 5ல் சனி, 9ல் கேது, 10ல் சந்திரனும் 12ல் சூரியன், புதன், செவ்வாய் என்று கிரக அமர்வு உள்ளது.
 குருபகவான் 2ல் நிற்பது என்பது நல்ல நிலையை குறிக்கிறது. ராசிக்கு 6க்கும், 9க்கும் பாக்கியாதிபதி 2ல் இருப்பது மிக நல்லதொரு நிலையாகும். குருவின் சாரநாதன் கேதுபகவான் 9லிருப்பது நல்ல பல சாதனைகள் புரியும். ஆத்ம ஞானம், வீடு மனை கட்டவும் விவேகமும் உண்டு பண்ணும். சுற்றமும், நட்பும் சூழும். தங்கள் பிள்ளைகள் படிப்பில் உற்ற கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு திருமண தடை வந்து விலகும். நொந்த மனம் சீர் பெற்று உய்யும். வழக்கமான பணிகளை இணங்க செயல்பட சுணங்கிப் போகாது.
     கல்வித் துறை, நிதி, நீதித்துறையினர்களும் மேன்மையான வளமான எதிர்காலம் படைக்க தக்கதொரு தருணமாகும். அக்கம் பக்கம் எள்ளித் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் கிட்டே வந்து ஒட்டிக் கொள்வார்கள். சிலர் தங்களின் பூர்வீக இடங்களை மாற்றி அமைக்க வேண்டிய சூழலும் வரும். மைந்தர்களை பிரிய வேண்டிய நிலைமை உண்டுபண்ணும். தந்தை வகைச் சொத்துக்களும் செய் தொழிலும் சீர்பெற்று பேர் பெறும். நாம் வல்லவர்கள், நல்லவர்கள் என்று, மற்றவர்களைக் கடிந்துவிட வேண்டாம். 2ல் குரு சுக்கிரன் சேர்க்கை அவ்வாறு ஆக்கிவிடும்.
       ஆரம்ப நாட்களில் தொழில் வியாபாரத்தில் லாபம் குறைந்து காட்டும் என்றாலும் சரிசெய்து சமாளிக்கலாம். மனைவி வகை உறவுகள் வலுப்பெறும். ஆபரணத் தொழில், கட்டிடத் தொழில்,ரசாயனம், விஞ்ஞானம் தொழில், மொத்த வியாபாரம் செய்வோர் எல்லாம்  நலம் பெறுவர். உறவுகளில் திருமணம் உல்லாசம். சிறு செலவுகளும் அன்புச் சண்டைகளும் உண்டு.
     வெளிநாட்டு பயணத்திற்கு தயாராகிக் கொள்ளுங்கள். அங்கு வேலை வாய்ப்பும் சிறக்கும். ஆலயதரிசனமும், குருதரிசனமும் உங்களை சிறந்த நெறிப்படுத்தும். கவலை வேண்டாம். 7க்கும், 8க்கும் உடையவர் சனிபகவான் 5ல் நிற்பது ஞாபக மறதியையும், பிள்ளைகளால் மன வருத்தத்தையும் தரும். அம்சத்தில் குரு சனி பார்வை நிம்மதி தந்து விடும். நொந்து விட வேண்டும். குழந்தைக்காக காத்து நிற்கும் தம்பதியர்கள் குன்றில் நின்று அருள் அளிக்கும் குமரேசனை எண்ணி விரதமிருக்க நிச்சயம் மழலைகள் தவழும். சிறு சிறு பயணங்கள் உண்டு. அடிக்கடி செலவுகளுண்டு.
    13/12/2015ல் ராசிக்கு 2ல் குரு, 3ல் செவ்வாய், ராகு, 4ல் சுக்கிரன், 5ல் சூரியன், சனி, 6ல் சந்திரன், புதன், 9ல் கேது கிரக அமைர்வுகளாக உள்ளன. உங்களின் மைந்தர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கவும். அவர்களுக்கு புதிய தொழில் தொடங்கி வைக்கவும். வீடு கட்டித் தரவும். நல்ல பணி நயம்பட நடக்கும். 5ல் உள்ள கிரகநிலை உங்களுக்கு பிள்ளைகள் மேல் பந்தபாசம் உண்டு. ஆனால் அவர்களுக்கு அந்த அளவுக்கு இல்லாமல் போகும். அன்பு காட்டி காலத்தை தள்ளிப் போக வேண்டியது தான். நோயின் தாக்கம் நிலை கொள்ளும் போது உடல் மேல் பற்று வைத்து கவனத்தில் அதற்கு உற்ற உபாயம் தேடுங்கள். திடீரென்று பணம் வரும். திடீரென்று செலவு வரும்.
    குலதெய்வத்திற்கு வேண்டுதல் வைத்தவர்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். குறைவிலா வாழ்வு மலரும். பத்திரிகை தொழிலுக்கும் விற்பனை முகவர்களுக்கும் ஏற்றதொரு மாற்றமுண்டாகி மகிழலாம். உணவு சம்பந்த துறைகளும் துணிமணிகள் ஆடம்பர சேர்க்கை உண்டு. கடனுண்டு. காரியத்தில் கண்ணாக இருந்து செயல்படுவீர்கள். தாய்வகை மூத்த சகோதரர்கள் இடையூறு இல்லாமல் பார்க்க வேண்டும். பள்ளி கல்லுரி ஆசிரியர்கள் தங்கள் தரம் உயர மேற்கல்விகளும் தொடரலாம். வெற்றி பெறலாம். சினிமா, சின்னத்திரையினர் வண்ணமயமான எதிர்காலம் படைக்கலாம். எண்ணங்கள் ஈடேறும். காதல் திருமணங்கள் சில பிரச்சனைகள் வந்து நன்றாக நடக்கும்.
     பெற்றோர் ஆசி பெறுவது சிறப்பைத் தரும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று மனதில் கொண்டு செயல்பட, அவர்கள் வயப்படுவர் வாழ்வு மலரும். புதிய சொத்து வாங்கவும், விற்கவும் ஏதுவாகும். சிக்கனத்தை இக்கணம் உணர்ந்து நடக்க வேண்டும். 13/04/2016ல் ராசிநாதன் சந்திரன் 12ல் குரு, 2ல் ராகு, 5ல் சனி, செவ்வாய், 8ல் கேது, 9ல் குரு, சுக்கிரன் 10ல் புதனும் கிரக நிலைகளாக உள்ளனர். பேச்சில் நிதானமும் உணவு கட்டுப்பாடும் அவசியம். குழந்தை விஷயத்தில் அக்கறை வேண்டும். அவர்கள் கல்வி, தொழில், எதிர்காலம் சிறக்கும். கர்ப்பிணிப் பெண்கள் நலமாய் குழந்தைகள் பெற திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பாளை நினைத்து வழிபடுங்கள். குறைவிலா நிறைவான நன்மக்கள் கிட்டும். 5ல் உள்ள கிரக நிலையினால் தேவையற்ற கற்பனைகள், மனக்குழப்பம், பயம் ஏற்பட வாய்ப்புண்டு.
    அலையும் தொழில்கள் எல்லாம் சிறக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்புகள் எண்ணியபடி நடக்கும். மனைவியின் வகை உறவுகளும் செலவுகளும் உண்டு. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களின் யோகாதிபதிகள், சூரியனும், குருவும், செவ்வாயும் நல்ல நிலையில் நிலை கொண்டுள்ளனர். உங்கள் மாமனார் வீட்டில் நடக்காது என்றிருந்த காரியங்கள் கூட திடீரென்று நடந்து அசத்தும்.
பரிகாரம்

வாழ்க வளமுடன் !