Capricorn -Makaram-மகரம்-

 குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016
குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016
மகர ராசி
உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்
விஷ்ணு அம்சம் கொண்ட வேகம், விவேகம் உள்ள மகர அன்பர்களே! 
தற்காலம் 13/07/2015ல் கேது 3ல் 5ல் சந்திரன், 6ல் சூரியன், புதன், செவ்வாய், 8ல் சுக்கிரன், குரு, 9ல் ராகு, 11ல் சனிபகவானும் கிரக அமர்வுகளாக உள்ளது.
     3க்கும் 12க்கும் உடைய குருசாமி 8ல் சுக்ரனுடன் நிற்கிறார். மகரத்தில் 12க்கு உடையவன் 8ல் குரு. குருதசை நடப்பிலிருந்தால் திடீர் என்று நடக்காத ராசிகள் நடந்து அசத்தும். குருவின் சாரநாதன் கேது 3ல் நிற்பது அதுவும் குருவீட்டில் தைரிய வீரிய ஸ்தானத்தில் உங்களின் வீரபராக்கிரமம் மேல் மேம்படும்.
     கமிஷன் தொழில், மருத்துவத் தொழில், இரசாயனத் தொழில், வீடு, சொத்துக்களின் முதலீடு செய்தல் அல்லது விற்பது, தாய் வழிகளில் விரிசல், தாய்க்கு உடல் சோர்வு, வைத்தியம், வீடுகள் செப்பனிடுதல் வாகனங்கள் பழுது பார்த்தல், மனைவிக்கு திடீர் வேலை வாய்ப்பு, தந்தை வழிகளில் சொத்து கிடைத்தல் வேலைக்கு செல்லும் மனைவியின் பதவி உயர்வு, உத்யோக மேன்மை. அவர்களுக்கு, தனக்கென சொத்துப் பத்துக்கள் வாங்குவது, வேலை தேடும் மகனுக்கும் வேலை கிடைப்பது, நற்பலனை ஏற்படும்.
       பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். பெண் எடுக்க உங்களுக்கும் பெண் கொடுத்த மாமனுக்கும் விரோதம் சச்சரவு வராமல் பார்க்கவும் மனைவி செய்யும் உத்யோக விஷயமாக வெளியூர் செல்லுதல் பிரிவினை ஏற்படும். சமாளித்துப் போக வேண்டியதுதான். 8ல் குருவும் சுக்கிரனும் இணைவு மைந்தர்களால் உங்கள் மனத்துக்கு சங்கடங்களால் உண்டாகும். பெறுபேற்றுவார்கள். டென்ஷன், மகாலட்சுமி, விஷ்ணு அனுமன் வழிப்பாடுகள், ஏழைகளுக்கு உணவு அளித்து நல்லாசிகள் பெறுங்கள்.
        சனிபகவான் 11லிருந்து பொதுவாக நன்மைதான் செய்வதுண்டு. அவர் சொந்த சாரம் பெற்று சிம்மத்தில், அம்சத்தில் 8ல் பகை வீட்டில் கொடுத்த பணம் வாங்கத் தடை. நாம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவது கடினம்.
      அம்சத்தில் 2க்கும், 9க்கும் உரிய சனி, புதன் பார்வை சில, பல நன்மைகள் சித்தியாகும் வாக்கின் திறன் கொண்டு வாழும், சட்ட வல்லுனர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர், கணினிப் பணியாளர்கள், கணக்காளர்கள், டூர்ஸ், போக்குவரத்து வாகனம் வைத்து பொருள் ஈட்டுபவர்களும், நலம் பெறும்  வாய்ப்புண்டு. விவசாயிகள் தென்னை, வாழை, கொடுவகை பயிர்கள், திராட்சை, அவரை, புடலங்காய், போன்ற பயிர் செய்து பயன் பெறலாம். அரசு உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதரிகளால் தொல்லைகள் வந்து சேரும். எனினும் பெரியோர்களுக்கு மதிப்பு, மரியாதை, கொடுக்க வேண்டும். உடமைகள் கவனிக்க பராமரிப்புச் செலவுகள் உண்டு. எனினும் சமாளிக்க கூடும்.
       13/12/2015ல் 3ல் கேது, 8ல் வியாழன், 9ல் செவ்வாய், ராகு, 10ல் சுக்கிரன், 11ல் சூரியன், சனி, 12ல் சந்திரன், புதன் எனும் படி கோள்நிலைகள் உள்ளன. குருபகவான் அஷ்டாமதிபதியின் சாரம் பெறுவது, காரியத்தடை, வேண்டாத செலவுகள் வகையில் திருப்தியில்லா சூழ்நிலைகளும், திடீர்வரவும், செலவும் உண்டு. இது காலம் 10ல் உள்ள சுக்கிரன், ராகு சாரம் பெற்றிருப்பது சில நன்மைகள் செய்யும்.
       தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். அவர்களின் வரவுகளும், உறவுகளும் முடங்கும். உங்களைப் பற்றிய கவலைகள் அவரைப் தொற்றிக் கொள்ளும். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியவர்கள் மனதை நோகவிட வேண்டாம். ஆறுதல் வார்த்தைச் சொல்லி தேற்றுக! இஷ்ட தெய்வ, குலதெய்வ வழிபாடுகள், சிரத்தையுடன் செய்து வரத்தைப் பெறுக! அத்துடன் ஸ்ரீரங்கம் சென்று ராமானுஜர் உடையாரையும், திரு அரங்கநாதனையும் வேண்டி வணங்கி வர நன்று. உங்களின் ராசிக்கு யோக்காரன் சுக்கிரன். எனவே, சுக்கிரனையும் ஞானகுருமார்களை தியானித்து சிறப்புப்பெறலாம். தொலை தொடர்ப்பயணம், அயல்நாட்டு பயணங்களும் தடையின்றி நடக்கும்.
     சினிமா, சின்னத்திரை, மின்சார உபகரணப் பொருட்கள் புத்தகம் எழுத்துப் பணிகள் அயல்மொழி, அயல் மதத்தாரர்களின் உறவுகளும் சீர்பெற்று சிறக்கும். ஹோட்டல் உணவுப் பண்டங்கள் விற்போர்க்கு லாபம் குறையும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழகுங்கள். வாகனங்களில் செல்லும்போதும் கவனம். கலையுலக மேதைகள் அவர்கள் படைப்பை வெளிக்கொண்டு வரதக்க பணியாற்றி சாதனை படைக்கலாம். திரையரங்குகள், திருமண மண்டபம், அப்பார்ட்மெண்ட் வைத்து தொழில் செய்வோர்களும் நல்லதான பலன்கள் கிட்டும்.
     சனிபகவான் அவர்சாரத்தில் நிற்பது வெற்றிகள் தரும். ஒப்பில்லா உழைப்பாலே உயர்வுகள் தப்பில்லாமல் வந்து சேரும்.
      ஆன்மீக சிந்தனையாளர்களும், ஜோதிடர்களும், ஆலய பணியாற்றுவோரும், தாங்கள் பணிகள் சிறக்கும். 8ல் குருபகவான் சூரியன் சாரம் 8க்குடையவன் சாரம் பெற்றது. கற்கும் கல்வி ஆன்மீக விசாரம், வேத சாஸ்திரம் போன்றவைகளில் மேதாவித்தனம் உண்டாகும். உண்மைமிகு பரம் பொருளை சிரம் தாழ்த்தி பற்றிட தொற்றிடும் இடம் அகலும் அரசு பணியாள்ர்களும், அரசியல் வாதிகளும் தாங்கள் மேலதிகாரிகளுக்கும் கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் நற்பெயர் வருமாறு நடக்க வேண்டும்.
       குருவின் ஆரநாதன் சுக்கிரன் உச்சம், பெற்றிருப்பதும் சூரியனுடன் சேர்ந்து நிற்பது, கடின உழைப்பின்பால், பல சாதனைகள் புரியலாம். அன்நியப் பேர்களும் உங்களை அறியும் வண்ணம் திண்ண்மாய் நடந்தேறும். காரியங்கள், கலையுலகப் பணி, பத்திரிகைத் தொழில், விற்பனை முகவர்கள், தாயின் சொத்துக்களை எதிர்நோக்கி நிற்போர் எல்லாம் வெற்றியை பெறுவார்கள். மனைவி உங்களை எரிச்சலூட்டும் வண்ணம் கடின வார்த்தைகளை கொட்டுவார்கள். நீங்களும்தான். எனவே சொற்களை உதிர்த்து சிரமத்திற்கு ஆளாக வேண்டும். புத்ரபேறுத் தடை உண்டாகும். பின் கிடைக்கும். குலதெய்வத் திருவருளை எண்ணிப் பிரார்த்தனை செய்ய தட்டுத் தடுமாறலாம். உற்றதொரு தெய்வத்தைத் தொற்றி பிடித்திட பிள்ளைபேறும். சீரும், பேரும் நடக்கும். சகோதரர்களுடன் இணக்கம் நடக்கும் நன்மைதான்.
       சனிபகவான் பாக்கியவாதி புதன் சாரம் பெற்றுஅவர் அம்சத்தில் உச்சம் பெற்று நிற்பது கல்வி கேள்வி ஞானம், கல்விதுறை, நிதி, நீதித்துறையினர்கள் மேன்மை பெறுவார்கள்.
      செய்யும் தொழில் சிறந்து நற்பெயர் பெறுவார்கள். கடன் தொல்லை அகலும். புதியதான ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். நண்பர்களால் அனுகூலங்களும் கஷ்டப்பட்டு வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு. 3க்கும், 8க்கும் உடையவர்கள் பரிவர்த்தனையால் மனச் சங்கடங்கள் உண்டு. இளைய சகோதரர்களால் மூத்த சகோதரர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகும். அழகுப் பொருட்கள் விற்பனை, ஆலைத் தொழில், பேக்கரி போன்றவை சிறந்து விளங்கும். அத்துடன் மூத்த சகோதரிகள் சகோதரர்கள் உடல்நிலை கவனிக்க வேண்டும்.
பரிகாரம் : 27 கொண்டை கடலை மாலையை குருபகவனுக்கு வியாழக்கிழமை தோறும் சாற்ற வேண்டும், அப்பொழுது தான்  நினைத்தகாரியம் நடக்கும் . திருசெந்தூர் முருகனையும் தரிசனம் செய்யவும் நலமுன்டாகட்டும் .
வாழ்க வளமுடன்