Gemini -Mitunam- மிதுனம்-

 குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016
  • துலாம் - விருச்சிகம் - தனுசு - மகரம் - கும்பம் - மீனம் 

  • குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016
    மிதுன ராசி
      மிருகசீரிகம் 3,4ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்  
     கலை, ஞானம் எதையும் அறிவால் சாதிக்கும் திறன் கொண்ட மிதுனராசி அன்பர்களே!
     இதுவரை 2ஆம் இடத்தில் இருந்த குருபகவான் இன்று கடக ராசிலிருந்து உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் வாசம் செய்கிறார். 3ல் குருகெடுபலன் என்று சொல்லுவார்கள். இருப்பினும் குருவின் சாரநாதன் 10ல் கேதுவின் காலில் நிற்பது ஒரு வகையில் நன்மைகள் சேர்க்கும் உண்மை. அயல்மத இனத்தவர்களால் அனுகூலம், தெய்வீக ஞானம் சித்தியாகும். மருத்துவர்கள் பொறியாளர்களுக்கு மின்சாரத்துறை, சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல காரியங்கள் நடந்தேறும். மேல்நிலை கல்விகளில் கேள்விகள் உண்டாகும். மூத்த, இளைய சகோதரர்கள் சேர்ந்து தொழில் செய்யலாம். இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, தட்டிக் கொடுத்து வேலை வாங்கி கொள்ள வேண்டும். இதனால் உறவுகள் நீடிக்கும். தன் நலனிலும் தந்தை, தாய் நலனிலும் அக்கறை காட்டி கவனிக்க வேண்டும்.
          கடன் என்றால் பயம் உங்களுக்கு. ஆனால் அது உங்களைத் தேடி வரும். ஓடியும் விடும். மனத்திற்கு இனிய சிறு சிறு பயணங்களும் நண்பர்களின் ஆதரவும் ஏற்படும். மனம் நாடி தேடிய மண வாழ்க்கை அமையும். வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும். மனைவினால் கணவனுக்கும், கணவனால் மனைவிக்கும் மேன்மைகள் வரும்.
         காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான உடல் உறுப்புகளில் கவனம் காட்டுங்கள். கௌரவம் பார்த்தால் வேலை ஆகாது. இறங்கி போனால் காரியங்கள் நடக்கும். வங்கி, பைனான்ஸ், சட்டம், ஒழுங்கு, நிதி, காவல்துறையினர் மேன்மை பெறவும், செய்தொழில் அபிவிருத்தி உண்டாகும். இஷ்டதெய்வ குலதெய்வ வழிபாடுகளும் கோயில் திருப்பணி செய்வோர்கள் தங்கள் பணியை செய்வன செய்ய கிரகநிலை துணை நிற்கும். பூமி, நிலம், வாகனத் தொழில் செய்வோர்கள் லாபம் ஈட்டி நலம் காணலாம். உளம் மகிழ்லாம். தந்தை வழி உறவுகளில் அனுசரிக்க நன்று. ராசிநாதன் புதன், புதனில் சாரநாதன் ராகு கண்ணிலும் அம்சத்தில் குரு சேர்ந்து இருப்பது ஒரு சிறப்பான நிலையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. தேக்கமுற்ற திருமணங்கள் ஊக்கமுடன் செய்து முடிக்க நல்ல நிலை ஏற்படும்.
         கூலித் தொழில் செய்வோர்களின் வாழ்க்கையில் விருப்பங்கள் நிறைவேறும். வரும் 13/12/2015ல் கிரக நிலைகள் ராசிக்கு 3ல் குரு, 4ல் செவ்வாய், 5ல் ராகு, 6ல் சுக்ரன், சூரியன் – சனி 7ல், சந்திரன் – புதன் 10ல் கேது உள்ளன. மக்கள் நலம் மேன்மை பெறும். மழலைச் செல்வம் வேண்டி நிற்போருக்கு இறைவன் இன்னருள் புரிவார். குருவின் சூரிய சாரம், பத்திரிகை முகவர்கள் தங்களின் காரியங்களில் முயன்று, முனைந்து செயல் புரிய அயல் இடம் அலைந்து திரிந்திட ஆனந்தம் சேர்ந்திடலாம். தைரியம், எழுச்சி பிறக்கும். இருப்பினும் சகோதரர்களிடம் அரசு வகையிலும் சிக்கல் உண்டாகுமாறு நடக்காமல் பார்க்க வேண்டும். பின் அவதிக்குள்ளாக சந்தர்ப்பம் உண்டு. நல்ல பலன்கள் சொல்லும்போது மகிழ்ச்சி பெறும்.
        வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைகள் வரினும், பின் நிறைவேறும். சனிபகவான் சுயசாரம் பெற்ரு நிற்பது ஒரு வகையில் பயமில்லை. அலைந்து திரியும் வியாபாரிகள் கடின உழைப்பில் காரியங்கள் சாதிக்கலாம். ஆபரணத் தொழில் சிறந்து விளங்கவும் உயர்ந்த நிலை பெறவும் சந்தர்ப்பம் உண்டு. ஹோட்டல் தொழில், விவசாயம் சிறந்து விளங்கும். பயணங்களின் போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
          மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தி கல்வியில் தேர்ச்சி பெறுங்கள். உல்லாச கூத்துகளில் சிக்கி சிரமங்கள் படுவதை தவிர்க்க வேண்டும். அதுசமயம் உங்களில் சிலருக்கு தெய்வீக வெண்டுதலை நிறைவேற்ற முடியாமல் போகும். அவன் அருளால் தான் வணங்கிட நன்று.
         13/04/2016ல் சந்திரன் 1ல், குரு, ராகு 3ல், சனி, செவ்வாய், கேது 9ல், சூரியன், சுக்கிரன் 10ல், புதன் 11லும், கிரக நிலைகளாக உள்ளனர். இது காலம் குருவக்ர கதியிலுள்ளார். ராசிக்கு 5க்குடையவர் சாரம் பெறுவது சிற்சில நன்மைகள் செய்ய ஏதுவாகும்.
          அன்னியர்களின் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகளும் உண்டாகக் கூடும். சுக்கிர திசை, புதன் தசைகள் நடக்கும் அன்பர்களுக்கு அதிக நலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புத்திரர்கள் வகை செலவுகளும் விரோதங்கள் மற்றும் மருத்துவ செலவுகளும் கூட வர சந்தர்ப்பம் உண்டு. புத்திர பேறு எதிர்பார்ப்புகள் தள்ளி போகும்.
         துர்க்கை வழிபாட்டிலும், குருமார்களின் பக்தியிலும் ஜீவசமாதிகளின் தரிசனத்தால் உய்யலாம். மைந்தர்களை பெறலாம். வீடு, வாகனங்களின் ரிப்பேர் செலவுகளும் உண்டு.
         தந்தையின் தொழில்தான் ஏற்று நடந்த சூழ்நிலை உருவாகும். சொத்துக்களைவிற்பது வாங்குவது அடமானம் வைப்பது போன்ற நிகழ்வுக்கு இடமுண்டு. உறவுகளிலும் நட்பு வட்ட்த்திலும் திட்டமிடாமல் நடப்பதால் போட்டி பொறாமைகளும் வரும். கவனமாக நடக்க வேண்டும். இரும்பு, இரசாயனப் பணிகள் சுணங்கி நடக்கும். பின் சீராகும் துணையாய் நின்ற உங்களுக்கு வீணாய் பழிகள் வந்தாலும் நாராயணன் காளினைப் பற்றிட வரும். இடர அகலும்.
    பரிகாரம்
         வியாழன் கிழமைகளில் முல்லை மலர்கள், கொண்டைக் கடலை, தாம்பூலம் தட்சணை வைத்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து குருவை வேண்டி நலன்கள் பெறலாம்.


    வாழ்க வளமுடன் !