சிம்ம ராசி நேயர்களுக்கு(2014 To 2017) இராசி மண்டலத்தின் 5ஆம் ராசி, உங்கள் சிம்மராசி. இதுவே முதலாம் ராசியாக இருந்திருந்தால் அதற்காகவும் நீங்கள் பெருமிதப்பட்டுக் கொள்வீர்கள். ஏனென்றால், இடர்பாடுகள், எதிர்ப்புகள் எவ்வாறாயினும் அவற்றை முறியடித்துக் கொண்டு முன்னுக்கு வரவேண்டும். எப்பேர்ப்பட்டவர்களாயிருந்தாலும் அவர்களை முடக்கிக் தாண்டி முந்திக்கொண்டு வரவேண்டும். உங்களுடைய முக்கியத்துவமும் தகுதியும் எப்பொழுதும் முன்னணியிலேயே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையான சுபாவத்தை அதிகப்படியாகவே கொடுக்கக் கூடியதுதானே உங்கள் ராசி.இப்பேர்ப்பட்ட உங்களுக்கு இதுவரையில் கோட்சார கிரகநிலவரமும் பெருமளவு ஒத்துழைத்து வந்திருக்கிறது. தைரிய சகாய ஜெய ஸ்தானத்தில் ஆனானப்பட்ட சனிபகவான் இருந்தபடி, உங்களுடைய முயற்சிகளுக்கும் சாதனைகளுக்கும் வெற்றி வாய்ப்புகளுக்கும் பக்கபலமாக இருந்து வருகிறாரே! பாப கிரகமான ராகுவும் ஒன்றரை வருட காலம் சனியோடு சேர்ந்திருந்து, தைரிய நடவடிக்கைகளுக்கும் தளராத முன்னேற்றத்திற்கும் உதவியிருக்கிறார்.வாக்கியப் பஞ்சாங்கப்படி 16-12-2014 (ஐய வருடம், மார்கழி மாதம் 1ஆம் நாள்) செவ்வாய்க் கிழமையன்று, பிற்பகலில் சனிகிரக ராசி மாற்றமாகும்.உங்கள் சிம்மராசியைப் பொறுத்தவரையில், இதுவரையில் இரண்டரை வருடங்களாக மூன்றாமிடமான துலாராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனிபகவான், அங்கிருந்து பெயர்ந்து அடுத்ததாக நான்காமிடமான விருச்சிக ராசிக்கு வந்து சேருகிறார். தண்ட செலவுகள், வீண் விரயங்கள், கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடுகள், பொன், பொருள் வசதி வாய்ப்புகளில் குறைபாடுகள், இடைஞ்சலான இடமாற்றம், வேலைகளை முன்னிட்டு வெளியூர் வாசத்தில் சிரமங்கள் என்றெல்லாம் நேரலாம்.4ம் இடத்தில் சனி நல்ல பலன்களைச் செய்வதில்லை என்பதுதான் நீங்கள் இப்பொழுது தெரிந்துகொள்ள வேண்டியது. அதற்காக நீங்கள் மனம் சோர்ந்து போய்விடக் கூடாது. 4ம் இடத்து சனிபகவானே சில விஷேச விதிகளின்படி கெடுதல்களைக் குறைத்தும் நன்மைகளைக் கலந்தும் கொடுப்பதற்குச் சாத்தியம் இருக்கிறதே. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் ஜென்ம ஜாதகமும் அதன் தசாபுத்திக் காலமும் இப்போழுது வலுவாகவும் சாதகமாகவும் இருந்தால், சனி கொடுக்கிற சங்கடங்களைச் சமாளிக்கலாம். ஆகவே, பயத்தையும் கவலைகளையும் துடைத்துச் தூர எறிந்துவிடுங்கள்.தலைக்கு சரிவர எண்ணெய் தடவாதிருப்பது, செம்பட்டை படிய விடுவது, திருத்தமாகத் தலை வாராமல் கேசம் கலைந்திருப்பது, பரட்டை போலத் தென்படுவது, தலை முடி மேலும் வெளுப்பது அல்லது உதிர்வது, தினசரி ஷேவ் செய்யாமல் முகத்தில் முள்முடி பயிராவது, முகத்தில் எண்ணெய் வழிவது, வியர்வைக் கசகசப்புடனேயே காணப்படுவது, அழுக்கான அல்லது பொருத்தமில்லாத சட்டையைப் போட்டுக் கொள்வது, தொளதொளா உடைகளில் துவண்டு போய்த் தெரிவது, அல்லது உடம்பை ஒட்டிய ஆடைகளில் ‘ஐயோ, பாவம்’ என்பது போலக் காட்சியளிப்பது, அடிக்கடி களைத்துப் போவது, வாடிய செடி போல வாட்டமாகவே தெரிவது, சோம்பலும் சோர்வும் சொந்தம் கொண்டாவது, படுத்தால் அடித்துப் போட்டதைப் போலத் தூங்குவது, இவ்வளவும் உங்கள் ஜென்ம ராசியில் பதிகிற சனிப்பார்வையால் உண்டாகக்கூடிய சமாச்சாரங்கள்தான்.இன்னும் என்னென்ன சுகசௌகரியமெல்லாம் குறையும் என்று பாருங்கள் சனி இருப்பது சொத்து ஸ்தானம் என்பதால், குடியிருப்பில் குறைகளுடன் வசிப்பது, இருக்கிற இடத்தில் இடைஞ்சல்களைச் சந்திப்பது, அடிக்கடி இடம் மாற வேண்டி வருவது, வீட்டுமனை வாங்கும் முயற்சி தாமதிப்பது, வாங்கிய மனையில் வீடு கட்டும் திட்டம் தள்ளிக்கொண்டே போடுவது, ஏற்கனவே உள்ள வீட்டில் பழுது பார்க்க வேண்டிய அவசியம் நேர்வது, சீர்த்திருத்த பிரச்சனைகள் சிரமம் கொடுப்பது, பராமரிக்கும் பொறுப்புகளில் பாடு அதிகமாவது, அனுபவ பாத்தியதைக்கு வில்லங்கம் குறுக்கிடுவது, பங்குத் தகராறுகளால் பாகம் பிரிவது என்றெல்லாம் ஏற்படலாம்.சனிராசி மாறி வந்து சஞ்சரிக்கிற இடம் மாத்ரு பந்து ஸ்தானம் என்பதால், தாயாருக்கும் நோய் நொடி உபாதைகள் அதிகப்படலாம். அம்மாவைச் சரிவரக் கவனிக்க முடியவில்லை. அவர்களிடைய தேவைகளைக் குறை இல்லாமல் செய்ய முடியவில்லை. அவர்களுடன் கருத்து ஒருமித்துச்சேர்ந்திருக்க முடியவில்லை- இப்படி ஏதாவது அம்மாவைப் பற்றிய அதிருப்தி ஏற்படத்தான் செய்யும்.தகப்பனார் சம்பந்தமாகவும் குறைகள் உண்டாவது சஜகம்தான். அவருக்கும் அதிகப்படியான பொறுப்புகள் சேர்ந்து அலட்டி எடுக்கும். காரிய ஸ்தானத்திலே பதியும் சனிப்பார்வையால் எந்த ஒரு வேலையையுமே எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் இழுபறிப்பட வேண்டியிருக்கும். சின்னக் காரியங்களையும் கூட சுலபமாகச் செய்து கொள்ள முடியாமல் சிரமப்படும்படியாகும்.மொத்ததில் 65 % நன்றாக இருக்கும் .பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு எலுமிச்சம் பழம் தீபம் ஏற்றி வரவும்.பிரதி திங்கள் ஸ்ரீ சிவ பெருமானுக்கு பச்சரிசி மாவு அபிஷேகம் செய்து வரவும் .கந்த சஷ்டி கவசம் படிக்கவும்
2015 ராசிபலன்கள் குரு பெயர்ச்சி 2015-2016 சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு-கேது பெயர்ச்சி