- துலாம் - விருச்சிகம் - தனுசு - மகரம் - கும்பம் - மீனம்
- குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016
துலா ராசி,சித்திரை 3,4ம் பாதங்கள், சுவாதி விசாகம் 1,2,3ம் பாதங்கள்நேர்மை குணமும் நிதானப் போக்கும் கலையரசன் சுக்ரன் பொருந்திய துலாம் ராசி அன்பர்களே!தற்காலம் 13/07/2015ல் உங்களின் ராசிக்கு 2ல் சனி, 6ல் ராகு, 8ல் சந்திரன் 9ல் சூரியன், புதன், செவ்வாய், 11ல் சுக்கிரன் குரு எனும் கிரக நிலைகளாக உள்ளனர். குருவின் சாரநாதன் கேது, கேது 6ல் நிற்கிறார். குருவீட்டில் சனிபகவான் சாரம் பெற்றுது சிறப்பைத் தரும். ராசிக்கு 3க்கும் 6க்கும் உடையவர் குரு11ல் லாபத்தில் நிற்பது எண்ணிய்யாவும் இனிதென நடக்கும் பொற்காலம். குருநட்பான வீட்டில் நலம் பெற்று சிறப்பைத் தர காத்திருக்கிறார். சந்திராஷ்டம தினத்தில் குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இருப்பினும் சந்திரன் செவ்வாய் சாரம் என்பதாலும் செவ்வாய் 9லிருப்பது, நட்பு, மனைவியின் உறவு போன்றவை மேன்மை பெறும் அமைப்பாகும். 4க்கும், 5க்கும் உரிய சனி பகவான் சொந்தக் காலில் இருப்பது வீடு, மனை போன்ற யோகம், மனதிற்கினிய நிகழ்வுகள் சின்னத்திரை சினிமா, கலை, இலக்கியம், நிதி, நீதித் துறைகள், கல்வித்துறை வெளிநாட்டு பயணங்கள் அதன் மூலம் நற்பயன்களும் தெய்வீக கர்மங்களும் கிடைக்கும்.புத்ரனும் தந்தையும் சேர்ந்து தொழில் புரியும் வாய்ப்புண்டு. சகோதரர்களுக்கு திருமண வாய்ப்பு வரும். அவர்கள் வியாபாரம் செய்து வரலாம். காதல் திருமணம் போன்ற நிகழ்வுகள் நடக்கும். அரசியல்வாதிகள் ஊக்கமுடன் ஆக்கப் பணிகளை, நல்ல வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளலாம். தாய், தந்தை நலன்கள் மேம்படும். அவர்களால் உங்களுக்கு அனுகூலப் பயன்கள் உண்டாகும். சனிதிசை, புதன் திசை நடப்பிலிருப்பவர்களுக்கு இது யோக காலமாய் மாறிவிடும். பூர்வீக சொத்துக்களிலிருந்து வில்லங்கங்கள் வழக்குகள் தீர்த்து நல்ல முடிவுக்கு வர காண்பீர்கள்.குலதெய்வ அருள் சித்தியாகும். ராசிக்கு 2லிருந்தும் சனி பாதச் சனி, பொங்கு சனி, என்று சொல்வதுண்டு. எனவே 7 ½ சனி பயத்தை விலகிக் கொள்ளுங்கள். அது நல்லது என்பது தெளிவு, மைந்தர்கள் அவர்கள் திட்டமிட்டபடி தொழில் அமைக்கவோ மண வாழ்க்கை அமைத்துக் கொள்ளவோ ஏதுவான காலம் நேரம் என்றே சொல்லலாம். மனைவிக்கு அவர்களின் தாய்விட்டுச் சொத்துகள், வாகனச் சேர்க்கை அவர் பெயரில் வீடு கட்டிக் கொண்டு அங்கு குடி போக போன்ற நிகழ்வுகள் உண்டு.வேலைக்கு போகும் மனைவினால் அனுகூலம் உண்டு. சிலருக்கு தூக்கமின்மை, வெளியூர் பயணங்களால் அலைச்சல் செலவுகள் உண்டாகும். 1ல் 7ல் உள்ள கேது ராகு அம்சத்தில் சில சோர்வுகளை உண்டாக்ச செய்வார்கள். பொறியியல், கணினித்துறை, கப்பல், விமானம், மருத்துவம் சார்ந்த துறையாளர்கள் மேம்படும் வாய்ப்பு உண்டாகும்.13/12/2015ல் 1ல் சுக்கிரன் 2ல் சூரியன், சனி, 3ல் சந்திரன் புதன் , 6ல் கேது, 11ல் குரு , 12ல் செவ்வை ராகுவும் கிரக அமர்வுகளாகும். தற்காலம் குருவின் சாரநாதன் சுக்கிரன் தனக்கொரு உற்சாகத்தையும் தெம்பையும் தந்த மகிழ்ச்சியில் திளைக்க வைப்பர். பூமி, ரியல் எஸ்டேட், கலையுலகப் பணிகள், எழுத்தாளர்கள், கடல் நம்பி வாழ்வோர்கள், விற்பனை முகவர்கள், டெக்ஸ்டைல்ஸ், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆகியோர்களும் விவசாயம் சார்ந்த தொழில்கால் வளர்ப்பவர்கள் இவர்கள் எல்லாம் சாதனை படைத்து வேதனை இன்றி வெற்றி காண்பார்கள். இப்பொழுது மைந்தர்களுக்கு அப்பா என்றால் பிடிக்காத நிலை ஏற்படும். அதுபோல மூத்த சகோதர்ர்களுக்கு உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் காணும்.உங்கள் வாக்கில் சனி, சூரியன் இணைவு கொண்டு இருப்பது குடும்பத்தில் தகராறு, வம்பு, தும்பு, வரக்கூடும். எனவே நிதானத்துடன் இருந்து காரியங்கள் ஆற்றுங்கள். இந்த கார்த்திகை மாதம் மட்டும் அரசு பணிகள் சுணக்கம். தந்தை மகன் உறவுகள் விரிசல் என உள்ளதால் பொறுமையுடன் இருக்கவும். பிரதோஷ வழிபாட்டை செய்க. புதன்கிழமை ராமபக்த அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றுக. கல்விச்சாலை நட்த்துவோர்கள் புதிய கட்டிடங்களைக் கட்டுவது பள்ளி கல்லூரியின் தரத்தினை உயர்த்தும் திறனைப் பெறுவார்கள்.மாணவர்களை பத்திரமாகப் பார்த்து ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் கடமையாகும். இளைய சகோதரத்திற்கு நலம் சேர்க்கும். உங்களுக்கு தைரியம் உண்டாகும். தந்தை, இஷ்ட தெய்வ, குலதெய்வ தரிசனங்களுக்கும் திருத்தலச் சுற்றுலாக்களும் செல்லும் பாக்கியம் பெறுவார்கள். சிலர்க்கு மூத்த சகோதர்களும், இளைய சகோதரர்களும் ஒட்டிக் கொள்ளும் நிலையும் உங்களை வெட்டி விடும் நிலையும் ஏற்படும். பொறுத்துக் கொள்ளுங்கள்.ஆண்டவன் உங்கள் அருகில்தான், தைரிய ஸ்தானத்திலுள்ள கிரகநிலையும் பார்க்கும் கிரகநிலையும் சமாதான கிரகநிலைக்கு வந்துவிடும். நொந்து விட வேண்டாம். காலம் மாறும்போது உறவுகள் தானே வரும். மனைவியின் சாதுரியம் உங்களுக்கு ஊக்கம் தரும். கணவன் மனைவி உடல்நலம் பேணிக்காக்க செலவுகள் உண்டு. வைத்தியமுறை மருத்துவர்கள், புதிய கட்டிடங்கள் கட்டுதல் செப்பனிடுதல் தொழில் வளர்ச்சி மேல்நிலை, ஆய்வுக் கல்வி பெறவும் வாய்ப்பு. இன்னும் சிலருக்கு கோயில் கட்டி குடமுழுக்கு செய்யும் பணி புண்ணிய தேடல் போன்ற நல்ல நிகழ்வுகளும் உண்டாகும். வாகனக் கடன், வீட்டுக் கடன் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் நலம், தாயின் நலனுக்கும் ஒரு பாதுகாப்பு கவசம்.13/04/2016ல் ராசிக்கு 2ல் சனி, செவ்வாய், 5ல் கேது, 6ல் சூரியன் , சுக்கிரன், 7ல் புதன், 9ல் சந்திரன், 11ல் குரு, ராகு எனும் கிரக அமர்வுகளாகும். மனைவி மக்களாலும், பிஸினஸ் பார்ட்டிகளாலும் அனுகூலமான நிலைகள் உண்டாகும். உங்களுக்கு பேச்சில், வாக்கினில் நிதானம் வேண்டும். மாணவர்கள் தேர்வு காலங்களில் அதிக கவனம் உற்சாகம் காட்டி கற்க வேண்டும். பெற்றோர்க்கும் ஆசிரியர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். மறதியை தவிர்க்கவும். தினம் கால் மணிநேரம் அமைதியாக இருங்கள். சொன்னதைச் சொல்லி மற்றவர்களை குழப்ப வேண்டாம். இது காலம் சனீஸ்வரபகவான் புதன் எங்கிற வித்யாகாரகன், மற்றும் பாக்கியாதிபதியின் சாரம் கொண்டது.திருமண நிகழ்வுகளுக்கும், மக்கள் நலம் சூழவும் உயர்பதவி பெறவும் வெளியிடங்களில் பயணங்களுக்கு சென்று நன்மைகள் எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ளவும் நன்மை பயக்கும். அருள் நாடியே பொருள் தேடலாம். குருவின் சாரம் தற்சமயம் சுக்கிரன் சாரம் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பது அண்ணன் தம்பிகளின் உறவுகளில் திடீர் மாற்றமும் புதிய ஒப்பங்களும் உண்டாகக் கூடும்.புத்ரர்களுக்கு இடமாற்றம் புதிய தொழில் அமைப்பது திருமணம் அவர்களுக்கென்று வீடு வாகனம் வாங்கிக் கொடுப்பது போன்ற நன்மையான நிலை வரும். மனைவிக்கும் புத்திரர்களுக்கும் உடல்நலம் பெற விநாயகர் துர்க்கை பிரார்த்தனை செய்து சிறப்படையலாம்.குருவின் பார்வைகள் 3ல் இடம், 5ம் இடம், 7ம் இடம் ஆகிய இடங்களுக்கு பார்வை செலுத்துகிறார். தைரியம், சகோதர்கள், குலதெய்வ அருள் மனதுக்கு இனியவை, மனைவி நண்பர்களின் ஆகிய எல்லாவகையிலும் சிறப்புண்டு.பரிகாரம்வியாழந்தோறும் முல்லை மலர்களால் தெட்சணாமூர்த்தி அர்ச்சித்து வணங்கி வர நல்லது நடக்கும்.
வாழ்க வளமுடன் !
2015 ராசிபலன்கள் குரு பெயர்ச்சி 2015-2016 சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு-கேது பெயர்ச்சி