- துலாம் - விருச்சிகம் - தனுசு - மகரம் - கும்பம் - மீனம்
குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016
விருச்சிக ராசிவிசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டைநல்லண்ணமும், துடிப்பும் விடாமுயற்சியும் மிக்க விருச்சிக ராசி அன்பர்களே!உங்களின் ராசியில் சனிபகவான் 5ல் கேது, 7ல் சந்திரன், 8ல் சூரியன் , புதன், செவ்வாய், 10ல் சுக்கிரன், குரு, 11ல் ராகு என்னும்படி கிரக அமர்வுகளாகும். தற்கால குருவின் சாரநாதன் கேது 5க்குடையவர், குரு 10ல் நட்பு ராசியிலிருப்பது நன்மைதான். இஷ்ட தெய்வ குலதெய்வ பிராத்தனைகள் செய்யவும். மக்களால் மகிழ்ச்சியும் உண்டு. அதேநேரம் உடல்நலம் ஆரோக்கியம் சீர்கெடும். சிலருக்கு பதவி, உத்யோகம் பொருளாதாரம் உடைமைகளை, பாதுகாப்பில் அதிகம் கவனம் வேண்டும். 3க்கும், 4க்கும் உடைய சனிபகவான் 10லிருந்து அம்சத்தில், இது அம்சயோகம். தொலைதொடர்பு, கமிஷன் ஏஜென்ட், விற்பனை முகவர்களுக்கு சிறப்புண்டாம்.பொறுப்புடன் கடின உழைப்புக்கு முக்கியத்துவம் தந்து, செயல்பட வேண்டும். மலைவள விவாசாயம், ஆடம்பர அழகு சாதனப்பொருட்கள், விற்பனையாளர்கள், ஆபரண விற்பனையாளர்கள், அரசு பணியாளர்கள், பொறியியல் வல்லுனர்களும், கூட்டுத்தொழில் புரிவோர்களும் நலம் கண்டிட முயலுங்கள். வெற்றி நிச்சயம் தரும்.நாம்தான பெரியவர்கள் என்று எண்ணிய வார்த்தைகளைக் கொட்டி, உறவுகளை வெட்டிக் கொள்ள வேண்டாம். நஷ்டம் உங்களுக்குத்தான் என்பதை கருத்தில் வைத்தால் சரி, ஜென்ம சனி பகவானின் மந்த நிலையை அம்சத்தியில் சனியை குருபகவான் பார்வை செலுத்துவது தொழிலை சிக்கலின்றி நடத்த ஏதுவாகும். வேலையை எதிர்பார்க்கும் உங்கள் மைந்தர்கள் வேலைலை கிடைக்கத் தடை வரும். பின் திடீர் என்று வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியைக் கருத்துடன் தொடருங்கள். வெற்றியைக் காணலாம். 8லுள்ள கிரகநிலை சாதகமாய் இல்லை. கவனம் தேவை.கட்டிடப் பணியாளர்களுக்கு சிரமங்கள் இருந்தாலும் வேலை விட்டு விட்டு வரும். சமாளிக்கலாம். மனைவியின் பெயரில் வீடு, இடம், வாகனம் வாங்குவது தள்ளி பின் நிறைவேறும். அக்கம்பக்கம் அன்புடன் நடக்க நன்மை உண்டு. 10க்குடைய கிரகம் சூரியன் 8ல் சில நாட்களுக்கு மட்டும். பின் சரியாகிவிடும். சூரியன், குருதசை, சுக்ர தசை நடப்பிலிருந்தால் நன்மைதான். நல்ல மனைவியும் அனுகூலமான வேலையிலுள்ளவர்களாக இருக்கவும். அவர்கள் சொத்துக்கள் கிடைக்கவும். காதல், மணம் கைகூடும். 13/12/2015ல் ராசியில் சூரியன், சனி, 2ல் சந்திரன், புதன், 5ல் கேது, 10ல் குரு 11ல் செவ்வாய், ராகு, 12ல் சுக்ரனும் கிரகநிலைகளாக உள்ளன.தற்காலம் குருவின் சாரநாதன் சூரியன் என்பதால் தொழில் சிறக்கச் செய்யும். அரசுவகை ஆதாயம் காணலாம். பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள் வாக்கு திறத்தால் ஜீவனம் செய்வார்கள். வங்கி, விளையாட்டு வீர்ர்கள், சீட்டு, பைனான்ஸ் நடந்துவோர்கள் ஆகியோர்கள் சிறக்க வாய்ப்புகள் கனியும். பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணமும், தானே செய்யும் காதல் திருமணமும், நடந்தேறும். மூத்த இளைய சகோதரர்களுக்கு தொழில், வகைச் சிறப்புகள், கலைகளில் மேன்மையும் உண்டாக்கச் செய்யும்.மனைவியுன் உத்யோக உயர்வும் வீடு, நிலம், தட்டுமுட்டு சாமான்கள், ஆபரணச் சேர்க்கை கூட்டுத் தொழிலில் சிறப்பும், லட்சுமி கடாட்சமும் சித்தியாகும். கால்நடை வளர்ப்போர்களும் விவசாயிகளும் நலம் பெறலாம் இருப்பினும் கால்நடை வளர்ப்பில் அதிககவனமும் வேண்டும். கோ பூஜை செய்ய இன்னும் பல நன்மை காத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஊனமுற்ற மாற்றுதிறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் உதவி செய்து ஜென்ம சனிபகவானின் கனிவான அருளைப் பெறலாம். டூர்ஸ் டிராவல்ஸ் நடத்துவோர்கள், அவர்கள் தொழிலை விருத்தி செய்யவும் பலன் பெறவும் வாய்ப்புகள் உண்டாகும். வேல் கொண்ட வேலவனை நாளும் கொண்டாட திண்டாடும் நிலை வராது. வாழ்த்துகள் வளம் பெறலாம்.ராசியில் சூரியச் சனிபகவானின் சேர்க்கையும் ஒரு விதத்தில் அரசுப் பணியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், தந்தை – மகன் உறவுகளுக்கும், தொழில் வகைச் சிக்கலுக்கும் இடமளிக்கும், எனவே எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். சில நாட்களுக்குத்தான் என்பதில் மனதில் கொள்ள வேண்டும். தந்தையின் செயல்திறன் குறையும். அவர் வாக்குத்திறத்தால் எதையும் சாதிக்க வல்லவர். சொத்துக்கள் விஷயத்திலும் உடல்நிலை விஷயத்திலும் கவனம் காட்டிக் கொள்ள நலம் காணலாம். தந்தையின் கோபம் கடினமாகத் தானிருக்கும். பொறுத்தது போக வருத்தமில்லை. அம்சத்தில் குரு2லிருந்து 10மிடம் பார்வை செய்வதும் தொழில் வகையில் மக்கள் நலம் மேலோங்கும். இரும்பு ஆலைத்தொழில் தெய்வீக்க் காரியங்களும் நடக்கும். அம்பிகையின் வேண்டுதல்கள் நலம்.13/04/2016ல் ராசியில் சனி, செவ்வாய், 4ல் கேது, 5ல் சுக்கிரன், சூரியன், 6ல் புதன், 8ல் சந்திரன், 10ல் குரு, ராகு, 5க்கும் 10க்கும் பரிவர்த்தனை நிகழ்வு ராஜயோகம் காட்டும். சின்னத்திரை, சினிமா அரசியல் அரசு சார்ந்து தொழில் முனைவோர், ஆன்மீக அலய பணியாளர்கள், நீர்நிலைத் தொழில் நடத்துவோர், பேக்டரி தொழில்ற்சாலை நடத்துவோர், கப்பல் மீன் பிடித் தொழிலுக்கும் சாதகமான காலகட்டமாக உள்ளது பயன்பெறலாம். மகன் தந்தை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் நிலைகளும் உண்டாகி மகிழலாம்.குருபகவான் ராகுசேர்க்கை குரு சண்டாள யோகத்தைக் காட்டும். இதனால் திடீர் முன்னேற்றம் அயல்மனிதர் பிறமதத்தினர்கள் அன்னிய தேச வாசம், வீடு, நிலம் பெருக்கம், மருத்துவம், இரசாயனம், தொழில் மேன்மை, தற்காலம் குருபகவான் சுக்கிரன் சாரம் பெற்று இருப்பது, மனைவி மக்கள் சுப இனிய நிகழ்வுகள் திருமணம், சீர், சடங்குகள் நடக்கும். சனிபகவான் சாரம், புதன் கிரகம் என்பதால் எதிரித் தொல்லை, கடன் சிற்சில உடலுபாதை, அண்ணன் தம்பி பிரச்சனைகளும் உண்டாகக் கூடும். கருத்துடன் பொறுத்தல் நலம். ஆஞ்சநேயர்க்கு வடைமாலை, வெண்ணெய் வைத்து அர்ச்சனைகள் செய்யுங்கள். மனைவிக்கு கணவனாலும், கணவனால் மனைவிக்கும் அவர்கள், சொந்தபந்த உறவுகளில் நலமுண்டு. மனைவிக்கு வீடு, வாகனம், நிலம் வாங்கலாம். அவர்க்கு உத்தியோக முன்னேற்றம் உண்டாகும். வயிறு மற்றும் கண்களை கவனிக்க வேண்டும். பயம் வேண்டாம்.பரிகாரம்குருபகவானை வியாழன் தோறும் நெய்விளக்கு போடவும்.வாழ்க வளமுடன்!
2015 ராசிபலன்கள் குரு பெயர்ச்சி 2015-2016 சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு-கேது பெயர்ச்சி